[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்
  • BREAKING-NEWS வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே
  • BREAKING-NEWS தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS பட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

கேரள சினிமாவில் ஓரங்கட்டுகிறார்கள்: நடிகை பார்வதி புகார்!

they-are-trying-to-oust-me-from-industry-parvathy

கேரள சினிமாவில் தான் உட்பட திரைப்பட பெண்கள் கூட்டமைப்பை சேர்ந்த நடிகைகளை ஓரங்கட்டுகிறார்கள் என்று நடிகை பார்வதி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

தமிழில், பூ, மரியான், உத்தமவில்லன் உட்பட சில படங்களில் நடித்தவர் மலையாள நடிகை பார்வதி. கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார்.  கேரளாவில் நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். அவரை கேரள நடிகர் சங்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் இந்த பிரச்னையில் நடிகர் சங்கத்துக்கு எதிராகவும் அவர் பேசி வந்தார். அதோடு, நடிகைகள் சிலர் தொடங்கியுள்ள திரைப்பட பெண்கள் கூட்டமைப்பிலும் அவர் முக்கிய பங்கு வகிக்கிறார்.

முன்னணி நடிகரான மோகன்லால், மம்மூட் டிக்கு எதிராகவும் அவர் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தனக்கு வாய்ப்பு வழங்காமல் மலையாள சினிமா உலகம் ஓரம் கட்டு கிறது என்று புகார் தெரிவித்துள்ளார். 

அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், அவர் மேலும் கூறும்போது, ‘இது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கவில்லை. இது இப்படியே தொடர்ந்தால் என்னால், ’பொறுத்திருந்து பார்ப்போம்’ என்பதை மட்டுமே சொல்ல முடியும். நான் மவுனமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இதற்கு முன்னும் பல நடிகைகள் இப்படி பாதியிலேயே சினிமாவில் இருந்து காணாமல் போயிருக்கிறார்கள்.

அவர்கள் எதற்காக நடிக்காமல் போனார்கள் என்பதற்கான உண்மையான காரணம் யாருக்கும் தெரியாது. சினிமாதுறையை தங்கள் கட்டுப்பாட் டில் வைத்திருக்கிற சிலர் என்னையும் சினிமாவில் இருந்து வெளியேற்ற நினைக்கின்றனர். 

கடந்த 13 வருடங்களாக சினிமாவில் நடித்துவருகிறேன். சில சிறந்த படங்களிலும் நடித்துள்ளேன். தேவையென்றால் என்னால் மற்ற மொழிக ளிலும் நடிக்க முடியும். இல்லை என்றால் கடையோ விடுதியோ திறக்க முடியும். ஆனால், போராட்டத்துக்கு கிடைத்த விலை இது என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். நாங்கள் எங்களுக்காக மட்டும் போராடவில்லை. சினிமாவில் உள்ள அனைவருக்குமாகத்தான் போராடுகி றோம்.


திரைப்பட பெண்கள் கூட்டமைப்பில் இருக்கும் ரீமா, ரம்யா நம்பீசன், ரேவதி போன்ற நடிகைகளுக்கும் இதுதான் நிலைமை. வேண்டுமென்றே எங்களை ஓரங்கட்டி வருகிறார்கள்’ என்றார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close