[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு
  • BREAKING-NEWS கஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்

சர்கார் சர்ச்சை ! திரையுலக பிரபலங்கள் கண்டனம்

tamil-film-industry-expresses-the-views-on-sarkar-controversy

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் தீ‌பாவளியன்று திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் அதிமுக அரசை விமர்சிப்பது போல் உள்ளதாக புகார் எழுந்தது. படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளுக்கு அமைச்சர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் திரையரங்குகளை முற்றுகையிட்டு, விஜய்யின் பேனர்களை கிழித்தனர். அசம்பாவிதங்களை தடுக்க திரையரங்கில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சர்ச்சைக்குரிய காட்சிகளை படக்குழு நீக்க வேண்டுமென்றும் அமைச்சர்கள் பலர் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தச் சூழலில் சர்கார் திரைப்படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதிகள் இன்று பிற்பகல் காட்சிகளில் நீக்கப்பட்டிருக்கும் என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க இணைச் செயலாளர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சர்க்காருக்கு ஆதரவாக திரைத்துறையைச் சேர்ந்த பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.

சர்காருக்கு ஆதரவாக பேசிய நடிகர் ரஜினிகாந்த் தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு,அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும்,படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் எனவும் இத்தகைய செயல்களை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பிரச்னை குறித்து ட்விட்டரில் பதிவிட்ட கமல்ஹாசன், “முறையாகச் சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் ‘சர்கார்’ படத்துக்கு, சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல. விமர்சனங்களை ஏற்கத்துணிவில்லாத அரசு தடம்  புரளும். அரசியல் வியாபாரிகள் கூட்டம் விரைவில் ஒழியும். நாடாளப்போகும் நல்லவர் கூட்டமே வெல்லும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தணிக்கை குழு தணிக்கை செய்த திரைப்படத்தை தணிக்கை செய்ய நினைப்பது சட்டப்படி குற்றம் என்றும் அப்படி இருக்குமென்றால் தணிக்கை குழு எதற்கு என இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தணிக்கைக்குழுவால் தணிக்கை செய்யப்பட்டு மக்களால் திரைப்படம் பார்க்கப்பட்டுவிட்டது. பிறகு இந்த கூச்சலும் குழப்பும் ஏன் என்று நடிகரும் , நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் கேள்வி எழுப்பியுள்ளார்.

தணிக்கை செய்த படங்களை சர்ச்சைக்கு உள்ளாக்குவது எல்லாம் விளம்பர கணக்கில் தான் சேர்கிறது. அதுவும் இலவச விளம்பரம் தான் தயாரிப்பாளர் பிரபு நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ‘தமிழ்ப்படம்’ இயக்குநர் அமுதன், “இதை நான் கடுமையாக எதிர்க்கிறேன். நாங்களும் எங்களால் முடிந்த அளவிற்கு சிறப்பானதை தரமுயன்றோம். ஆனால் எங்களுக்கு இப்படி ஒரு பப்ளிசிட்டியை தரவில்லை. எனவே இது முற்றிலும் ஒருதலை பட்சமான நடவடிக்கை” என கிண்டலாக கூறியுள்ளார்.

 

தணிக்கை குழு தணிக்கை செய்த திரைப்படத்தை தணிக்கை செய்ய நினைப்பது சட்டப்படி குற்றம்.பின்பு நீக்கப்பட்ட காட்சிகளுடன் மறு தணிக்கை செய்து தான் படத்தை வெளியிட வேண்டும்,இதுதான் நடைமுறை, ஆகவே எவருக்கும் எந்த அமைப்புக்கும் காட்சிகளை நீக்கும் அதிகாரமில்லை என இயக்குநர் சீனுராமசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close