[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.66 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.63 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது

கோமளவள்ளியை கூகுளில் தேடிய நெட்டிசன்கள் !

komalavalli-word-is-most-searched-on-google

சர்கார் ரிலீஸுக்கு பிறகு  கோமளவள்ளி என்ற வார்த்தையை கூகுளில் அதிகம் பேர் தேடி வருகின்றனர்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சர்கார்’. பல சர்ச்சைகளை தாண்டி தீபாவளியன்று இப்படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனிடையே ‘சர்கார்’ திரைப்படத்தில் வில்லி கதாப்பாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். அவருக்கு திரைப்படத்தில் கோமளவள்ளி எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது ஜெயலலிதாவின் இயற்பெயர் என சர்ச்சை எழுந்துள்ளது. மேலும் அரசின் திட்டங்களை கொச்சைப்படுத்தும் விதத்தில் படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறி அதிமுக அமைச்சர்கள் பலரும் ‘சர்கார்’ படம் குறித்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

Read Also -> முன் ஜாமீன் கோரி ஏ.ஆர்.முருகதாஸ் உயர் நீதிமன்றத்தில் மனு

இதைத்தொடர்ந்து புதிய தலைமுறை சேனலுக்கு பேட்டியளித்த அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கோமளவள்ளி என்பது ஜெயலலிதாவின் பெயரே இல்லை எனவும் இதை ஜெயலலிதாவே தன்னிடம் கூறியுள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்நிலையில், இதுகுறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், “எங்களை பொறுத்தவரை கதைகளை பலர் எழுதி இருக்கிறார்கள். அதை குறை சொல்லவில்லை. ஆனால் எதற்காக தேவையில்லாமல் அந்தப் பெயரை வைக்க வேண்டும். அதுதான் எங்களுடைய கேள்வி” எனக் குறிப்பிட்டார். 
மேலும், எவ்வளவோ பெயர் இருக்கும்போது, ஏன் அந்தப் பெயரை ஏன் வைக்க வேண்டும் எனவும் காழ்ப்புணர்ச்சியுடன் இழிவுபடுத்தும் செயலாகவே அதை பார்க்க முடிகிறது எனவும் ஜெயக்குமார் தெரிவித்தார். 

Read Also -> “எங்களுக்கு ஏன் பப்ளிசிட்டி கொடுக்கவில்லை”- ‘தமிழ்ப்படம்’ இயக்குநரின் நக்கல்

இந்நிலையில் சர்கார் திரைப்படம் வெளியான நாளில் இருந்து ''கோமளவள்ளி'' என்பதை கூகுளில் பலரும் தேடியுள்ளனர். கோமளவள்ளி என்பது ஜெயலலிதாவின் இயற்பெயரா? ஜெயலலிதாவின் இயற்பெயர் என்ன? கோமளவள்ளியின் அர்த்தம் என்ன? சர்காருக்கும் கோமளவள்ளிக்கும் என்ன தொடர்பு உள்ளிட்ட பல கேள்விகளை உள்ளடக்கி இந்த தேடுதல் நடந்துள்ளது.

Read Also -> இன்று மீண்டும் சென்சார் ஆகும் பணியில் ’சர்கார்’  

கோமளவள்ளி தொடர்பான தேடுதல் மட்டுமின்றி சசிகலா, அதிமுக, வரலட்சுமி, சுந்தர் பிச்சை, 49p உள்ளிட்ட பல வார்த்தைகள் சர்கார் ரிலீசுக்கு பிறகு அதிகம் தேடப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close