[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு
  • BREAKING-NEWS கஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்

‘இந்தியன் 2’ படப்பிடிப்பு வேலைகள் மும்முரம்

kamal-haasan-s-indian-2-shooting-to-commence-soon

நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் உருவாக இருக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதத்தில் தொடங்க உள்ளதாக அதன் தயாரிப்பு நிறுவனமான ‘லைக்கா புரொடக்ஸன்ஸ்’ கூறியுள்ளது. 

கமல் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கிய படம் ‘இந்தியன்’ 1996 ஆம் ஆண்டு வெளியானது. ஊழலை ஒழிப்பது குறித்து இப்படத்தின் கதை அமைந்திருந்தது. கமல் இருவேடங்களில் நடித்த இந்தப் படம் மூன்று தேசிய விருதுகளை பெற்றது. சிறந்த நடிகருக்கான விருதை கமல் பெற்றார். 

இந்நிலையில், ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் முதல் சீசனில், நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் மற்றும் தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜூ ஆகியோர் ‘இந்தியன் 2’ படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர். 

ஆனால் ‘விஸ்வரூபம்’ படத்தில் கமலும் ‘2.0’ படத்தில் ஷங்கரும் பிஸியாக இருந்ததால் ‘இந்தியன்2’ படத்தின் பணிகள் காலதாமதமாகியது. இதையடுத்து இப்படத்தின் தயாரிப்பாளராக இருந்த தில் ராஜூ இப்படத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவிப்பு வெளியிட்டார். 

பின்னர், ‘2.0’ தயாரிப்பு நிறுவனமான ‘லைக்கா புரொடக்ஸன்ஸ்’ ‘இந்தியன்2’ படத்தை தயாரிப்பதாக அறிவிப்பு வெளியிட்டது. 

இந்நிலையில், தற்போது, ‘இந்தியன்2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதத்தில் தொடங்க உள்ளதாகவும் ஆனால் திரைப்படம் 2020 ஆம் ஆண்டில்தான் வெளியிடப்படும் எனவும் லைக்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.  
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close