[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு
  • BREAKING-NEWS தனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS ஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்

மணி ரத்னத்துடன் இணையும் ‘96’ பட இசையமைப்பாளர்

96-music-director-govind-vasantha-teams-up-with-mani-ratnam

இயக்குநர் மணிரத்னத்துடன் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான ‘96’ படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வஸந்தா இணைந்துள்ளார். 

சி.பிரேம்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி, நடிகை த்ரிஷா நடிப்பில் வெளிவந்து வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘96’. இப்படம் பலருடைய பள்ளிப் பருவக் காதலை நினைவுப்படுத்தும் வகையில் இருப்பதால் அதனை ரசிகர்கள் வெகுவாக கொண்டாடி வருகின்றனர்.

     

இந்தப் படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் ஹிட் ஆனது. பாடல்கள் அனைத்தும் காதல் ததும்பும் வரிகளுடன் மெல்லிய இசையில் இருந்தது, இளைஞர்கள் கவரும் படியாக இருந்தது. ‘96’ படத்திற்கு கோவிந்த் வஸந்தா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் பின்னணி இசையும் பல்வேறு தரப்பினரால் பாராட்டப்பட்டது. 

இந்நிலையில், இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள புதிய படத்திற்கு கோவிந்த் வஸந்தா ஒப்பந்தம் ஆகியுள்ளார். தனசேகரன் என்பவர் இயக்கவுள்ள இந்தப் படத்தில், அவருடன் இணைந்து மணிரத்னம் கதை எழுதியிருக்கிறார்.

       

இதுகுறித்து கோவிந்த் கூறுகையில், “வேலுநாயகன் மற்றும் ஆனந்தன் போன்ற கதாபாத்திரங்கள் நமக்கு அளித்த மணிரத்னத்துடன் இணைந்து பணியாற்றவுள்ளேன். அவர் எழுதி தயாரிக்கவுள்ள படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி உள்ளதில் பெருமை கொள்கிறேன். தனசேகரன் இந்தப் படத்தை இயக்குகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:

[X] Close