[X] Close
JUST IN
  • BREAKING-NEWS எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு
  • BREAKING-NEWS வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS பத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு - பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS திருச்சி: மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 71பேர் காயம்
  • BREAKING-NEWS சென்னை வண்டலூர் பூங்காவில் காணும் பொங்கலை முன்னிட்டு 3 மணி நிலவரப்படி 40,000பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS குஜராத்: அகமதாபாத்தில் வல்லபாய் படேல் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் திறப்பு

விஜய்யின் ‘சர்கார்’ போஸ்டருக்கு கட்டுப்பாடு

vijay-s-sarkar-poster-restrictions-by-tobacco-forum

‘சர்கார்’ திரைப்பட சுவரோட்டிகள் மற்றும் பதாகைகளில் நடிகர் விஜய் புகைப்பிடிப்பது போன்ற புகைப்படத்தை வெளியிடக்கூடாது என தியேட்டர் உரிமையாளர்களுக்கு புகையிலை கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது. 

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் 
‘சர்கார்’. இப்படத்தின் கதை திருட்டு குறித்த சர்ச்சை முடிவுக்கு வந்த நிலையில் நவம்பர் 6 ஆம் தேதி தீபாவளியன்று இப்படம் திரைக்கு வருகிறது. 

இதற்காக படக்குழுவினரும் விஜய் ரசிகர்களும் சுவரோட்டிகள் மற்றும் பதாகைகள் மூலம்  படத்தை விளம்பரப்படுத்துவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.  விஜய்யின் பிறந்த நாள் விழா அன்று ‘சர்கார்’ படத்தின் தலைப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. அதில் விஜய் சிகரெட் புகைப்பது போன்ற காட்சி பதிவாகியிருந்தது. 

இதையடுத்து புகையிலை கட்டுப்பாட்டுக்கான தமிழ்நாடு மக்கள் மன்றம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தது. அதில், "சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்கள் விளம்பரம் தடை மற்றும் ஒழுங்குமுறை சட்டத்துக்கு எதிராக 
‘சர்கார்’ போஸ்டர் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. 

உடனடியாக சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை நடிகர் விஜய், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், மற்றும் தயாரிப்புநிறுவனத்திற்கு சட்ட ரீதியாக நோட்டீஸ் அனுப்பியது. 

இந்நிலையில், தியேட்டர் உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் பன்னீர்செல்வம் ‘சர்கார்’ திரைப்படம் திரையிடும் அனைத்து திரையரங்குகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், விஜய் புகை பிடிப்பது போன்ற பதாகைகள் அல்லது சுவரொட்டிகளை ஒட்ட வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close