[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு
  • BREAKING-NEWS வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS பத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு - பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS திருச்சி: மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 71பேர் காயம்
  • BREAKING-NEWS சென்னை வண்டலூர் பூங்காவில் காணும் பொங்கலை முன்னிட்டு 3 மணி நிலவரப்படி 40,000பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்

எமலோக எலெக்‌ஷன்: புதிய எமனாகிறார் யோகிபாபு!

yogi-babu-to-play-the-lead-in-fantasy-comedy

எமலோகத்தை மையமாக வைத்து உருவாகும் ’தர்மபிரபு’ படத்தின் நடிகர் யோகிபாபு எமனாக நடிக்கிறார்.

ஸ்ரீவாரி பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பி.ரங்கநாதன் தயாரிக்கும் படம் ’தர்மபிரபு’. இவர் நாணயம், கள்வனின் காதலி, ராமேஸ்வரம் மற்றும் பல படங்களுக்கு தயாரிப்பு நிர்வாகியாக பணிபுரிந்தவர். பல படங்களை தமிழ்நாடு உரிமை பெற்று ரிலீஸ் செய்தும் உள்ளார். இவர் முதன்முதலாக தயாரிக்கும் படம் இது.

இந்தப்படத்தை முத்துகுமரன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே விமல் நடித்து வரும் ‘கன்னிராசி’ படத்தை இயக்கியுள்ளார். அந்தப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாக இதை இயக்குகிறார்.

எமலோகத்தில் எமன் பதவி முடிவடையும் நிலையில், புதிய எமனை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடக்கிறது. வாரிசு அடிப்படையில் யோகிபாபுவும், சித்ரகுப்தனாக பதவி வகித்துவரும் கருணாகரன் பதவி அடிப்படையிலும் எமனுக்கு போட்டி போடுகிறார்கள். இதில் யார் எமன் பதவியை தட்டி செல்கிறார்கள், தன் தகுதியை எப்படி நிரூபித்து கொள்ளப் போகிறார்கள் என்கிற காமெடி கதை.

சமீபத்தில் தன் உடல் மொழியாலும், வசன உச்சரிப்பாலும் அனைவரையும் தன் ரசிகர்களாக மாற்றி கொண்டிருப்பவர் யோகிபாபு. அவர் எமன் கேரக்டரில் நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

படத்திற்காக எமலோகம் செட் பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படுகிறது. இதற்காக கலை இயக்குநர் சி.எஸ். பாலசந்தர் அரங்க அமைப்பிற்க்கான வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டுள்ளார். 

டிசம்பர் மாதம் முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. முழுக்க முழுக்க சென்னையில் படப்பிடிப்பு நடைபெறும். பாடல் காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்படவுள்ளது. இசை, ஜஸ்டின் பிரபாகரன். ஒளிப்பதிவு, மகேஸ் முத்துசாமி. பாடல்கள், யுகபாரதி.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close