[X] Close
JUST IN
  • BREAKING-NEWS எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு
  • BREAKING-NEWS வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS பத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு - பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS திருச்சி: மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 71பேர் காயம்
  • BREAKING-NEWS சென்னை வண்டலூர் பூங்காவில் காணும் பொங்கலை முன்னிட்டு 3 மணி நிலவரப்படி 40,000பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS குஜராத்: அகமதாபாத்தில் வல்லபாய் படேல் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் திறப்பு

படமாகிறது ’மாப்பிள்ளை கலகம்’: வரலாற்றுக் கதையில் விக்ரம்!

vikram-to-star-in-anwar-rasheed-s-next-feature-film

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும் ’துருவ நட்சத்திரம்’,  ராஜேஷ் எம்.செல்வா இயக்கும் படங்களில் நடித்துவரும் நடிகர் விக்ரம், அடுத்து வரலாற்றுப் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை அன்வர் ரஷித் இயக்குகிறார். 

இது, மலபார் கலகம் அல்லது மாப்பிள்ளை கலகம் என்று அழைக்கப்படும் வரலாற்றுக் கதையை கொண்ட படம். கேரளாவில் மலபார் பகுதியில், பிரிட்டீஷ் அரசுக்கு எதிராக தொடங்கிய இந்த கலகம் பிறகு பெரும் இனக்கலவரமாக மாறியது. இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். 1921-ல் நடந்த வரலாற்றுச் சம்பவத்தை அன்வர் ரஷித் படமாக்குகிறார். 

இந்தக் கதையில் சுதந்திர போராட்ட வீரர், வரியன்குன்னத் குஞ்சாசமகத் ஹாஜியாக விக்ரம் நடிக்கிறார். மலபார் கலகத்தின் நூற்றாண்டு விழாவை ஒட்டி, 2021 ஆம் ஆண்டு இந்தப் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்தப் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

(அன்வர் ரஷித்)

மற்ற நடிகர், நடிகைகள் இன்னும் முடிவாகவில்லை. மலையாளத்தில் உருவாகும் இந்தப் படம் பின்னர் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்படும் என்று தெரிகிறது. 


இயக்குனர் ஐ.வி சசி, இந்த வரலாற்றுக் கதையை மையமாக வைத்து ’1921’ என்ற பெயரில் இயக்கிய படம், 1988 ஆம் ஆண்டு வெளியானது. இதில் மம்மூட்டி ஹீரோவாக நடித்திருந்தார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close