[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS கோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

சுந்தர்.சி தயாரிப்பில் மீண்டும் 'ஹிப் ஹாப்' ஆதி!

sundar-c-s-avni-movies-produce-hip-hop-adhi-s-film-again

இயக்குனர் சுந்தர்.சி.யின் அவ்னி மூவிஸ் தயாரிக்கும் படத்தில் ஹிப் ஹாப் ஆதி மீண்டும் ஹீரோவாக நடித்துள்ளார்.

‘ஹிப் ஹாப் தமிழா’ என்ற ஆல்பம் மூலம் பிரபலமானவர் ஆதி. இவர் ‘மீசைய முறுக்கு’ மூலம் ஹீரோவாகவும் இயக்குநராகவும் அறிமுக மானார். மெகா ஹிட்டான இந்தப் படத்தை இயக்குனர் சுந்தர்.சி-யின் அவ்னி மூவிஸ் தயாரித்திருந்தது. இதையடுத்து ஆதி ஹீரோவாக நடிக்கும் அடுத்தப் படத்தையும் இதே நிறுவனம் தயாரிக்கிறது.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார், டி.பார்த்திபன் தேசிங்கு. இவர் ‘மான் கராத்தே’, ‘ரெமோ’ படங்களில் இணை இயக்குநராக பணிபுரிந்தவர். ஆதி ஜோடியாக புதுமுகம் அனகா அறிமுகமாகிறார்.  மற்றும் இயக்குனர் கரு.பழனியப்பன், விக்னேஷ் காந்த், பாண்டியராஜன், கௌசல்யா, ‘எரும சாணி’ விஜய், ஹரிஷ் உத்தமன் உட்பட பலர் நடிக்கின் றனர். ஆதி, இசையில் 8 பாடல்கள் இதில் இடம்பெற்றுள்ளன. அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார். இவர், ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘டிமாண் டி காலணி’ போன்ற படங்களில் பணியாற்றியவர். 

’இது ஹாக்கி விளையாட்டு தொடர்பான படம். ஆதி ஹாக்கி வீரராக வருகிறார். பல ஊர்களுக்கும் சென்று படமாக்கியுள்ளோம். கிளைமாக்ஸ் காட்சிகள் மட்டும் 20 நாட்கள் படமாக்கப்பட்டது. நமது தேசிய விளையாட்டு ஹாக்கி என்பதால் ஹாக்கிக்கான பிரதான மைதானத்தில் ஷூட்டிங்கை நடத்தியுள்ளோம். 

ஹாக்கி தவிர, இப்படத்தில் நட்பு, காதல், குடும்பம் என அனைத்தும் இருக்கும். ஷூட்டிங் முடிந்துவிட்டது. அடுத்த வருட தொடக்கத்தில் படம் ரிலீஸ் ஆகும். விரைவில் படத்தின் டைட்டில் வெளியாக இருக்கிறது’ என்று படக்குழு தெரிவித்தது. இந்தப் படத்துக்கு ’ நட்பே துணை’ என்று டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close