[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு

பாலியல் வழக்கை ரத்து செய்யக் கோரி அர்ஜுன் மனு: நாளை விசாரணை

arjun-sarja-moves-high-court-demands-quashing-of-fir-against-him

தன் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்யக் கோரி, நடிகர் அர்ஜுன் தாக்கல் செய்துள்ள மனு மீது நாளை விசாரணை நடக்கிறது. 

பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை #MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் தெரிவித்து வருகின்ற னர். பாடலாசிரியர் வைரமுத்து மீதான பாடகி சின்மயின் புகாரை அடுத்து இந்த விவகாரம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆவணப்பட இயக்குனர் லீலா மணிமேகலை, நடிகை அமலா பால் ஆகியோர் இயக்குனர் சுசி கணேசன் மீது பாலியல் புகாரை முன்வைத்திருந்தனர். சுசி கணேசன், லீனா மீது வழக்குத் தொடந்துள்ளார்.

அந்த வரிசையில் கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன், நடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகாரை, மீ டூ மூலம் வெளிப்படுத்தினார். அதாவது ‘விஷ்ம யா’ (தமிழில் நிபுணன்) படப்பிடிப் பின் ஒத்திகை காட்சி ஒன்றில் தவறான முறையில் அர்ஜூன் தன்னிடம் நடந்துகொண்டதாக அவர் குற்றஞ் சாட்டி இருந்தார். இதுதொடர்பாக தனது ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் புகார் எழுதியிருந்தார்.

ஸ்ருதி ஹரிஹரன் புகாரை மறுத்திருந்த அர்ஜூன் அவர் மீது வழக்குப் பதிவு செய்வேன் எனக் கூறியிருந்தார். அர்ஜூனுக்கு ஆதரவாகவும் எதிராக வும் பலர் கருத்து தெரிவித்து வந்தனர். இதனிடையே, ஸ்ருதி மீது 5 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு பெங்களூரு நீதிமன்றத் தில் அர்ஜுன் வழக்குத் தொடுத்தார்.

இதனிடையே, 2015ம் ஆண்டு தனியார் சொகுசு விடுதியில் தன்னிடம் அர்ஜூன் அத்து நடந்து கொண்டதாகவும், தன் அறைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாகவும் ஸ்ருதி ஹரிஹரன், பெங்களூரு கப்பன்பார்க் காவல் நிலையத்தில் அர்ஜுன் மீது புகார் அளித்தார்.

இந்நிலையில், நடிகை ஸ்ருதி ஹரிஹரன் அளித்த புகாரின் அடிப்படையில் பெங்களூரு போலீசார் அர்ஜூன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

(நிபுணன் படத்தில்...)

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அர்ஜுன் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில் நடிகர் அர்ஜூனின் வக்கீல் பி.வி.ஆச்சார்யா, நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகி ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், அர்ஜுன் மீதான பாலியல் புகார் வழக்கை இன்றே (நேற்று) விசாரிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன் பேரில் இந்த மனு மீது நாளை விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதி தினேஷ்குமார் அறிவித்தார். இதையடுத்து இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. இதனால் கன்னட சினிமாவில் பரபரப்பு ஏற்பட்டுள் ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close