[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.66 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.63 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது

'கதை திருட்டு என சொல்வதே வருத்தமளிக்கிறது' சர்கார் குறித்து சமுத்திரக்கனி

sarkar-story-issue-worrying-me-says-director-samuthirkani

'சர்கார்’ திரைப்படத்தின் கதை தன்னுடையது என வருண் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவரது குற்றச்சாட்டை ‘சர்கார்’ படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மறுத்தார். 42 நாட்கள் கடுமையாக உழைத்து முருகதாஸுடன் இணைந்து ‘சர்கார்’ படத்தின் கதையை உருவாக்கியதாக கதாசிரியர் ஜெயமோகன் தெரிவித்தார். 

Read Also -> வடகிழக்குப் பருவமழை : தாமதம் ஏன் ?

இந்த நிலையில் வருண் ராஜேந்திரனுடன் சமரசம் செய்து கொள்வதாக முருகதாஸ் தரப்பு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பட டைட்டிலில் வருண் ராஜேந்திரனுக்கு நன்றி தெரிவிக்கவும் படக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. இருதரப்பினர் இடையே சமரசம் ஏற்பட்டதை அடுத்து ‘சர்கார்’ படக் கதை தொடர்பான வழக்கு முடித்து வைக்கப்பட்டதால் நவம்பர் ஆறாம் தேதி படம் வெளியாக எந்தத் தடையுமில்லை.

Read Also -> இந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் ? இதனை கவனிக்க !

இதுதொடர்பாக ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “வழக்கம் போல் நிறைய வதந்தி இஷ்டத்துக்கு பரவிக்கிட்டு இருக்கிறது. அதற்கான ஒரு சின்ன விளக்கம்தான் இது. பாக்யராஜ் என்னை அழைத்து இதுபோன்ற ஒரு பிரச்னை சென்றுகொண்டிருக்கிறது எனக் கூறினார். கள்ள ஓட்டு பிரச்னையை மையமாக வைத்து 10 வருடங்களுக்கு முன்பு அருண் என்பவர் ஒரு கதையை பதிவு செய்துள்ளார். மற்றபடி இந்தக் கதைக்கும், அந்தக் கதைக்கும் எவ்வித சம்மந்தமும் கிடையாது."

Read Also -> “சாமுவேல்ஸை வெறுப்பேத்துவதா..!” - கலீலுக்கு ஐசிசி எச்சரிக்கை

ஆனால், நமக்கு முன்னாடி ஒரு உதவி இயக்குநர் இப்படியொரு மூலக்கதையை பதிவு செய்திருக்கிறார். அவரை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் படத்தின் தொடக்கத்தில் ஒரு கார்டு போடுங்கள் என்று சொன்னார். சரி என்று நான் ஒத்துக் கொண்டேன். அந்த வகையில் மட்டுமே அவர் பெயர் வரும். மற்றபடி இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஏ.ஆர்.முருகுதாஸ்தான். அதில் எந்தமாற்றமும் இல்லை.” என்று கூறினார்.

இவ்விவகாரம் குறித்து சென்னையில் பேட்டியளித்த நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி "ஒருவொருக்கு தோன்றும் கதை இன்னொருவருக்கும் தோன்றுவதை தவறு என சொல்ல முடியாது. அதனை சமூகமாக முடித்துக்கொள்ள வேண்டும். இதனை கதை திருட்டு என்று சொல்வதே வருத்தமாக உள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close