[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் உடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு
  • BREAKING-NEWS பேரவை தேர்தலில் பாஜக கூட்டணியே ஆட்சியமைக்கும் - பொன்.ராதாகிருஷ்ணன்
  • BREAKING-NEWS டெல்லியில் மைக்ரோசாஃப்ட் இணை-நிறுவனர் பில்கேட்ஸ், பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் சென்னையை தனித்தொகுதியாக அறிவிக்க வேண்டும் – சீமான்
  • BREAKING-NEWS அதிசயம், அதிர்ஷ்டத்தை நம்புகிறவர் ரஜினி - அமைச்சர் ஜெயக்குமார்

நவம்பர் 3-ல் வெளியாகிறது 2.0 ட்ரைலர்..!

2-0-trailer-on-november-3

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படத்தின் ட்ரைலர் நவம்பர் 3-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் 2.0 படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. படம் நவம்பர் 29-ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில் படத்தின் ட்ரைலர் நவம்பர் 3-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை படத்தின் இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக படத்தின் 2டி டீஸர் யூடியூப் இணையதளத்திலும், 3டி டீஸர் தியேட்டர்களிலும் வெளியாகின. இதனை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி தள்ளினர். படத்தில் அக்ஷய் குமார், எமி ஜாக்சன் உள்பட பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

ஏற்கெனவே 2.0 படத்தின் விஎஃப்எக்ஸ் (VFX) உருவாக்கம் குறித்த காட்சிகளுடன் கூடிய புதிய மேக்கிங் வீடியோ ஒன்று அண்மையில் வெளியிடப்பட்டது. உலகின் பிரபலமான 25 ஸ்டூடியோக்களில் 1000 கலைஞர்களால் இந்த விஎஃப்எக்ஸ் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த மேக்கிங் வீடியோவை அப்போது ரஜினி ரசிகர்கள் பலரும் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் ஷேர் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close