[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பதவியை நீட்டிக்கக்கோரி பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் மனு
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு
  • BREAKING-NEWS எங்கள் குடும்பத்தினருக்கான எஸ்பிஜி பாதுகாப்பை நீக்கியதும் அரசியலில் ஒரு அங்கம் தான் - பிரியங்கா காந்தி
  • BREAKING-NEWS மக்கள் அதிமுக பக்கம் இருப்பதால் ரஜினி கூறும் அதிசயம், அற்புதம் எங்களுக்கு சாதகமாகவே அமையும் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் முறை அதிகார துஷ்பிரயோகத்திற்கும், குதிரை பேரத்திற்கும் வழிவகுக்கும் - திருமாவளவன் எம்.பி.
  • BREAKING-NEWS 2021 ஆம் ஆண்டில் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம் - முதல்வர் பழனிசாமி

இளம் ஹீரோவுடன் மலைக்கா 2 வது திருமணம்!

arjun-kapoor-and-malaika-arora-planning-to-get-married-next-year

தன்னை விட 12 வயது குறைந்த ஹீரோவை, நடிகை மலைக்கா அரோரா இரண்டாவதாக திருமணம் செய்கிறார்.

பிரபல இந்தி நடிகை, மலைக்கா அரோரா. மணிரத்னத்தின் ’உயிரே’ படத்தில் இடம்பெற்றுள்ள ’தக்க தைய்ய தைய்யா தைய்யா தைய்யா’ பாடலில் ஆடியவர் இவர்.   இவர் இந்தி ஹீரோ சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானை காதலித்து 1998ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அர்ஹான் என்ற ஒரு மகன் இருக்கிறார்.

நட்சத்திர தம்பதிகளான இவர்கள் வாழ்க்கையில் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்தனர். விவாகரத்து கேட்டு மும்பை பாந்திராவில் உள்ள குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டு, 6 மாதம் அவகாசம் அளிக்கப்பட்டது. இதில் ஒருமித்த கருத்து ஏற்படாததால் நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது. மகன் அர்ஹான் தந்தையுடன் வசித்து வருகிறார்.

தனியாக வசித்து வந்த மலைக்கா, டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். இந்நிலையில் இவரும் பிரபல நடிகர் அர்ஜுன் கபூரும் காதலிக்கத் தொடங்கினர். ஒன்றாக விழாக்களுக்குச் சென்று வந்தனர். இது கிசு கிசுவாக வெளியானாலும் இருவரும் காதலை வெளிப்படையாகச் சொல்லவில்லை. அர்ஜுன் கபூர், சமீபத்தில் மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் மகன். அவரது முதல் மனைவிக்குப் பிறந்தவர்.

இந் நிலையில் மலைக்கா அரோராவும் அர்ஜுன் கபூரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். 

‘அவர்கள் காதலித்து வருவது உண்மைதான். அடுத்த வருடம் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடுவார்கள்’ என்று அவர்களுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் சுவாரஸ்ய விஷயம் என்னவென்றால், மலைக்காவுக்கு வயது, 45. அர்ஜுனுக்கு வயது 33 !


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close