[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு
  • BREAKING-NEWS வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS பத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு - பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS திருச்சி: மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 71பேர் காயம்
  • BREAKING-NEWS சென்னை வண்டலூர் பூங்காவில் காணும் பொங்கலை முன்னிட்டு 3 மணி நிலவரப்படி 40,000பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்

'தலை'க்கு ஹெல்மெட் , புல்லெட்டில் அஜித் ! கலர்ஃபுல்லான விஸ்வாசம் போஸ்டர்!

viswasam-second-look-released

விஸ்வாசம் திரைப்படத்தின் இரண்டாவது போஸ்டர் இன்று வெளியானது. இதனை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்

அஜித் ரசிகர்களால் தினமும் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கப்படும் திரைப்படம் ‘விஸ்வாசம்’. அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது முதல் அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ஏதாவது ஒரு செய்தியை தேடிப்பிடித்து பரபரப்பாக்கி வருகிறார்கள். நான்காவது முறையாக இயக்குநர் சிவா, நடிகர் அஜித்துடன் இணைந்திருப்பதால் அதிகமான எதிர்பார்ப்பு இப்படத்திற்கு உருவாகியுள்ளது. இப்படத்தில் அஜித் இரு வேடங்களில் நடித்து வருகிறார். முதலில் அஜித்தின் வயதான தோற்றம் படமாக்கப்பட்டது. அடுத்து இளம் அஜித்திற்கான பகுதியும் நயன்தாரா பகுதியும் காட்சியாக்கப்பட்டன.

இப்படம் வரும் ஆண்டு பொங்கல் அன்று திரைக்கு வரும் எனப் பரவலான கருத்து உலவியது. அதற்கு ஏற்ப படப்பிடிப்பை வேகப்படுத்தி வந்தது படக்குழு. ஆனால் பொங்கலுக்கு இப்படம் வருவதற்கான வாய்ப்பு இல்லை என்றே சிலர் தகவல் தெரிவித்தனர். ஏனெனில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ அடுத்த வருட பொங்கல் விருந்தாக வர உள்ளதால் அஜித்தின் ‘விஸ்வாசம்’ மேலும் தள்ளி போகலாம் என்றார்கள். 

இந்நிலையில் அஜித் தனது காட்சிகளுக்கான டப்பிங் முழுவதையும் முடித்து கொடுத்துள்ளதாக தகவல் வெளியானது. அதனையடுத்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் மும்முரமாக போய்க் கொண்டிருப்பதாவும் படம் பொங்கலுக்கு நிச்சயம் வெளியாகும் என்றும் செய்திகள் வெளியாகின. அதனை உறுதிப்படுத்தும் விதமாக படத்தின் எடிட்டரும் தகவலை உறுதிப்படுத்தினார். இந்நிலையில் படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் விஸ்வாசம் இரண்டாவது போஸ்டர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு படத்தின் போஸ்டர் வெளியானது. பைக்கில் அஜித் அமர்ந்துகொண்டு இருப்பது போல வண்ணமயமாக போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல் அஜித் ரசிகர்கள் #ViswasamSecondLook என்ற ஹேஸ்டேக்கை சமூக வலைதளங்களில் இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close