[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு
  • BREAKING-NEWS கர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS ”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS எம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா - வைரலாகும் புகைப்படம்

“திரையரங்குகளில் சிசிடிவி கேமரா கட்டாயம்”- தயாரிப்பாளர்கள் சங்கம் 

cctv-to-be-compulsory-in-theatres-says-producers-council

தமிழக திரையரங்குகளில் சிசிடிவி கேமரா அமைப்பது கட்டாயம் என திரையங்க உரிமையாளர்கள், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திரைப்படத்துறைக்கு திருட்டு விசிடி மிகப்பெரும் சவாலாக உள்ளது. இன்றும் திருட்டு விசிடி விற்கப்பட்டாலும் இணையத்தில் படம் வெளியாவதே பெரும் பிரச்னையாக உள்ளது.  படம் வெளியாகி ஓரிரு தினங்களிலேயே இணையத்தில் படம் வெளியாகி விவதால் தியேட்டருக்கு வருவோரின் எண்ணிக்கை குறைவதாக கூறப்படுகிறது. இதைக்கட்டுப்படுத்த திரைப்படத்துறையினர் பல முயற்சிகளை எடுத்தாலும் படம் இணையத்தில் வெளியாகிக்கொண்டுதான் உள்ளது.  

இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் இணையத்தில் படம் வெளியாவதை எப்படி தடுக்கலாம் என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. 

அதன்படி தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் சிசிடிவி கேமரா நிறுவவும் படம் பார்க்க வருபவர்களிடம் கேமரா உள்ளதா என சோதிக்கவும் முடிவெடு‌க்கப்பட்டுள்ளது. மேலும் திரையரங்கின் உட் பகுதிகள், நுழைவுவாயில், வாகன நிறுத்தம் ஆகிய பகுதிகளில் வரும் நவம்பர் 6ம் தேதிக்குள் சிசிடிவி கேமரா பொறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. நவம்பர் 15ம் தேதிக்குள் சிசிடிவி கேமரா அமைக்காத திரையரங்குகளுக்கு புதிய திரைப்படங்கள் வழங்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது. 

திரையங்குகளில் ஒவ்வொரு காட்சியின் போதும் 2 நபர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் திரைப்படத்தை காண வரும் நபர்களிடம் கேமரா உள்ளதா எனவும் சோதிக்கப்படும் என்றும் திரைப்படத்தை கேமராவில் பதிவு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அத்தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. திருட்டு வீடியோவை தடுக்க தயாரிப்பாளர்கள்‌ சங்கம் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் இணைந்து ஒரு குழு அமைக்கும் என்றும் இக்குழு திருட்டு வீடியோவை ஒழிக்க கடுமையாக போராடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close