[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு
  • BREAKING-NEWS வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS பத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு - பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS திருச்சி: மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 71பேர் காயம்
  • BREAKING-NEWS சென்னை வண்டலூர் பூங்காவில் காணும் பொங்கலை முன்னிட்டு 3 மணி நிலவரப்படி 40,000பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்

“எங்கள் ஆசான் முத்துசாமி காலமானார்” - விஜய்சேதுபதி உருக்கம்

actor-vijay-sethupathi-condolences-to-na-muthuswamy-death

நாடக ஆளுமை ந.முத்துசாமி மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் நவீன நாடக வடிவத்தை உருவாக்கியவர்களில் முக்கியமானவரான ந.முத்துசாமி உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 82. தஞ்சாவூர் மாவட்டத்தின் புஞ்சை கிராமத்தில் 1932ம் ஆண்டு பிறந்த ந.முத்துசாமி, நவீன நாடகக்கலையை மீட்டெடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டவர். 

கூத்துப்பட்டறை என்ற அமைப்பை தொடங்கி நடிப்புப்பயிற்சி, பரிசோதனை முயற்சிகளை செய்தவர். ந.முத்துசாமியின் படைப்புகளை பாராட்டி, 2000வது ஆண்டு சங்கீத நாடக அகாடமியின் விருதும், 2005-ம் ஆண்டு தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசும் கிடைத்திருக்கிறது. கலைச் சேவை பங்களிப்புக்காக 2012ல் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்றவர் ந.முத்துசாமி.கூத்துப்பட்டறையில் பல முன்னணி நடிகர்களையும், இயக்குநர்களையும் உருவாக்கிய பெருமைக்குரியவர் ந.முத்துசாமி.

             

விஜய் சேதுபதி, விதார்த், விமல், விஷால், பசுபதி, நாசர், குரு சோமசுந்தரம் உள்பட பல நடிகர்கள் ந.முத்துசாமியின் கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்றவர்கள்தான். தமிழ் நாடக உலகின் முக்கியமான ஆளுமையான அவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சென்னையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு நடிகர் விமல் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் விஜய்சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கூத்துப்பட்டறையின் தந்தை..எங்கள் ஆசான் முத்துசாமி காலமானார்” என்று குறிப்பிட்டுள்ளார். 

   

ந.முத்துசாமி மறைவு குறித்து இயக்குநர் ராஜுமுருகன் புதிய தலைமுறையிடம் பேசுகையில், “ந.முத்துசாமி காலமானது தமிழ் கலையுலகத்திற்கு மிகப்பெரிய இழப்பு. நான் நிருபராக பணியாற்றிய போது இரண்டு முறை அவரை பேட்டி எடுத்துள்ளேன். அவர் மிகவும் எளிமையானவர். அவருடைய அறிவு மூன்று தலைமுறை கலைஞர்களை நாடக உலகிற்கும், திரையுலகிற்கும் தந்துள்ளது. நிறைய பேருக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டியவர். என்னுடைய இரண்டு படங்களில் பணியாற்றிய கலைஞர்கள் பலர் கூத்துப்பட்டறையில் இருந்து வந்தவர்கள். நடிகர் தினேஷ் கூத்துப்பட்டறையில் இருந்து வந்தவர். சோமு சுந்திரம் கூத்துப்பட்டறையால் கூர்மை தீட்டப்பட்டவர்” என்று கூறினார்.  

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close