[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது
  • BREAKING-NEWS காணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்
  • BREAKING-NEWS சேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்

“வைரமுத்து பற்றி சிலர் முன்பே சொன்னார்கள்”-ரஹ்மான் சகோதரி வாக்குமூலம்

several-women-have-told-me-about-vairamuthu-ar-raihanah

வைரமுத்துவின் செயல்பாடுகள் குறித்து ஏற்கனவே பல பெண்கள் தன்னிடம் சொல்லியிருப்பதாக ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி தெரிவித்துள்ளார்.

பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை #MeToo என்ற பிரசாரம் மூலம் வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். பாடலாசிரியர் வைரமுத்து மீதான பாடகி சின்மயின் புகாரை அடுத்து  இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பாடகி சின்மயி புகாருக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்தனர்.

இதுகுறித்து பேசிய வைரமுத்து, ''சின்மயி புகார் பொய்யானது என்பதற்கு அசைக்க முடியாத ஆதாரங்களை வைத்துள்ளேன். நான் நல்லவனா..? இல்லை கெட்டவனா..? என்பதை இப்போதே முடிவு செய்ய வேண்டாம். நீதிமன்றம் சொல்லட்டும். குற்றச்சாட்டுகள் அனைத்தும் உள்நோக்கம் கொண்டவை. சம்பந்தப்பட்டவர்கள் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயாராக இருக்கிறேன்'' என்று தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த சின்மயி, வைரமுத்துவிற்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என அதிரடியாக தெரிவித்தார்.

இந்நிலையில் வைரமுத்துவின் செயல்பாடுகள் குறித்து ஏற்கனவே பல பெண்கள் தன்னிடம் சொல்லியிருப்பதாக ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள பாடகியும், இசை அமைப்பாளருமான ஏ.ஆர்.ரெஹானா , “வைரமுத்துவின் நடத்தை குறித்து பல பெண்கள் ஏற்கனவே என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அதுபோன்று எந்த விஷயத்தையும் நான் எதிர்கொள்ளவில்லை. பல பெண்கள் அது குறித்து பேச பயப்படுகிறார்கள். 

வைரமுத்துவுக்கும் எனக்குமான ஒருசில சந்திப்புகளில் அவர் நற்பண்புடன்தான் நடந்துகொண்டார். அவரை நான் எப்படி குற்றம்சாட்ட முடியும்..? அதற்கு எனக்கு என்ன உரிமை இருக்கிறது..? யார் பாலியல் ரீதியான கஷ்டங்களை எதிர்கொண்டார்களோ..? அவர்கள் நிச்சயம் இதுகுறித்து வெளிப்படையாக சொல்ல வேண்டும். சின்மயி விவகாரத்தில் அவர் சொல்வதை நான் உண்மையாகவே ஏற்றுக்கொள்கிறேன். 

ஆனால் ஒரு பிரச்னை என்னவென்றால் 15 வருடங்கள் வரை காத்திருக்காமல் அன்றே அவர் பிரச்னையை சரி செய்திருக்க வேண்டும். வைரமுத்துவை அவமானப்படுத்துவற்காகத்தான் சின்மயி இப்படி நடந்து கொள்கிறார் என்றும் நான் நினைக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.

Courtesy: TheNewsMinute

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close