[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

“புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” - இயக்குநர் வெற்றிமாறன்

i-m-honestly-so-sorry-if-i-hurt-you-this-wasn-t-my-intention-says-director-vetrimaran

மனம் புண்படும்படி உள்ளதாக கூறப்படும் குறிப்பிட்ட காட்சி நீக்கப்படும் என ‘வடசென்னை’ திரைப்படத்தின் இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்

தனுஷுடன் வெற்றிமாறன் இணைந்த 3வது படம் ‘வடசென்னை’. இப்படத்தில் அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, கிஷோர் என திரைபட்டாளமே இப்படத்தில் இடம்பெற்றுள்ளது. சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.  மூன்று பாகங்களாக தயாராகவிருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்திற்கு நேர்மறையாக பல காரணங்கள் கூறப்பட்டாலும் எதிர்மறைக் கருத்துகளும் நிறைய வந்த வண்ணம் உள்ளன. 

குறிப்பாக 100வருட தமிழ் சினிமாவில் இதுவரை பயன்படுத்தப்படாத ஆபாச வசனங்கள் நிறைய பயன்படுத்தப்பட்டதாக பலரும் குறை கூறினர். வடசென்னை மக்களை பிரதிபலிக்க கெட்ட வார்த்தைகள் அந்த அளவுக்கு முக்கியமான ஒன்றுதானா என்றும் சினிமா ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். மேலும் மீனவ சமுதாயத்தை இழிவுப்படுத்தும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக பல கருத்துகளும் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகின்றன. இந்தப் பிரச்னைக்கு படத்தின் இயக்குநர் வெற்றிமாறன் அமைதி காத்த நிலையில் இது குறித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் ''படத்தில் உள்ள சில காட்சிகள் மீனவ சமுதாய மக்களை இழிவுப்படுத்தும்படியும், அவர்கள் மனம் புண்படும்படியும்  உள்ளதாக சிலர் கூறி வருகின்றனர். எங்களது நோக்கம் எந்த ஒரு ஒடுக்கப்பட்ட சமுதாயத்துக்கு எதிராகவும் சினிமா செய்வது அல்ல. மனம் புண்படும்படி உள்ளதாக கூறப்படும் குறிப்பிட்ட காட்சியை நீக்க முடிவு செய்துள்ளோம். அதற்காக தணிக்கைக் குழுவை நாடியுள்ளோம். 10 நாட்களுக்குள் காட்சி நீக்கப்பட்டுவிடும்.

‘வடசென்னை’யின் அடுத்தடுத்த பாகங்கள் அந்தப் பகுதி  மக்களின் வாழ்வாதார பிரச்னை, அவர்களின் வாழ்வியல் நெருக்கடிகளை நிச்சயம் பேசும். ‘வடசென்னை’யின் கதாபாத்திரமோ, சம்பவமோ யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் அவர்களிடம் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close