[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றியதற்கு எதிரான வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கஜா புயலால் வீடுகளை இழந்த 50 விவசாயிகளுக்கு வீடு கட்டித்தரப்படும் - நடிகர் ராகவா லாரன்ஸ்
  • BREAKING-NEWS நக்கீரன் கோபாலுக்கு எதிரான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல்துறைக்கு டிச.21ம் தேதி வரை தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS தொடர் மழையால் வேலூர், திருவாரூர், புதுச்சேரியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS தொடர் மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.78.88 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.74.99 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஓசூர் அருகே தம்பதி ஆணவக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சூடுகொண்டப்பள்ளியில் நந்தீஷ் பெற்றோரிடம் எஸ்.சி., எஸ்.டி ஆணைய துணைத்தலைவர் முருகன் விசாரணை

பாலியல் புகார்: ’அம்மா’ மீது நடிகை பாய்ச்சல்!

formal-complaints-not-easy-in-amma-sridevika

தமிழில், ‘ராமகிருஷ்ணா’ என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் மலையாள நடிகை, ஸ்ரீதேவிகா. அந்தப் படத்துக்குப் பிறகு ’அந்த நாள் ஞாபகம்’, செல்வபாரதி இயக்கிய ‘அன்பே வா’ , பா.விஜய்யின் ’ஞாபகங்கள்’ ஆகிய படங்களில் நடித்தார். ’ஆட்டோகிராப்’ படத்தின் கன்னட ரீமேக்கிலும் நடித்துள்ள இவர், மலையாளம் ,கன்னட படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 2010- ஆம் ஆண்டு பாலகாட்டைச் சேர்ந்த ரோஹித் என்ற பைலட்டை திருமணம் செய்துகொண்ட பின் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்.

(கணவர் ரோகித்துடன் ஸ்ரீதேவிகா)

சமீபத்தில் திலீப் விவகாரத்தில் பேட்டியளித்த கேரள நடிகர் சங்கத்தின் சார்பில் நடிகர் சித்திக், பழம்பெரும் நடிகை லலிதா ஆகியோர் அளித்த பேட்டியில், நடிகைகள் சிலர் நடிகர் சங்கத்தை கடுமையாக விமர்சித்து வருவதாகக் கூறினர். அதோடு சங்கத்துக்குள் எந்த பிரச்னையும் இல்லை என்றும் மீடு விவகாரம் தொடர்பாக ’அம்மா’வுக்கு எந்த விதமான புகாரும் வரவில்லை என்றும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவிகா, கேரள நடிகர் சங்கத்தை (அம்மா) கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுபற்றி பேஸ்புக்கில் அவர், பாலியல் புகார் குறித்து கடந்த 16 ஆம் தேதி ‘ ‘அம்மா’ வுக்கு கடிதம் அனுப்பி இருந்தேன். ஆனால், அதைப்பற்றி எதுவும் பேசாமல், பாலியல் தொல்லை தொடர்பாக எந்த பிரச்னையும் சங்கத்து வரவில்லை என்று அம்மா சொல்வது அதிர்ச்சியாக இருக்கிறது. பிரச்னைகளுக்கு தீர்வு காணாமல், அதை அமுக்கப் பார்க்கிறது. அம்மா அதை வெளிப்படுத்தாததால், இப்போது நான் அதை வெளியில் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. எனக்கு யார் பெயரையும் கெடுக்க வேண்டும் என்றோ, விளம்பரத்துக்காகவோ இதை சொல்லவில்லை.

2006 ஆம் ஆண்டு ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருந்தேன். ஒரு நட்சத்திர ஓட்டலில் எனக்கு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. நள்ளிரவில் என் அறை கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. நான் திறக்கவில்லை. தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களாக இப்படி கதவைத் தட்டும் சத்தம் கேட்டதும், நேராக ஓட்டல் நிர்வாகத்திடம், யார் இப்படி செய்கிறார்கள் என்பதைக் கண்காணிக்கச் சொன்னேன். அப்படி செய்தது படத்தின் இயக்குனர் என்பது தெரிய வந்தது. இதுபற்றி எனது அம்மா, என்னுடன் நடித்த ஹீரோவிடம் புகார் தெரிவித்தார். பிறகு என் அறை மாற்றப் பட்டது. 

இந்த சம்பவத்துக்கு பிறகு இயக்குனர் என்னிடம் கடுமையாக நடந்து கொண்டார். எனது காட்சிகள் குறைக்கப்பட்டன. எனது சம்பளமும் பேசிய படி வரவில்லை. அப்போது இதுபற்றி நடிகர் சங்கத்தில் புகார் சொன்னேன். யாரும் கண்டுகொள்ளவில்லை. அதை இப்போதும் கடிதம் மூலம் தெரிவித்தேன். அப்போது செயலாளராக இருந்தவர், இதை பெரிதுபடுத்தினால், உன் கேரியர் வீணாகிவிடும்’ என்றார். ’அட்ஜஸ்ட்’ அல்லது சமரசமாக போய்விட்டால் பட வாய்ப்புகளுக்கு பிரச்னை இல்லை. மறுத்தால் பட வாய்ப்புகள் மறுக்கப்படும். இதுதான் நிலைமை. இதுபற்றி இப்போதும் கடிதம் எழுதியுள்ளேன். ஆனால் இப்படியொரு கடிதம் வரவே இல்லை என்று அம்மா கூறுவதை ஏற்க முடியவில்லை’ என்று தெரிவித்துள்ளார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close