[X] Close
JUST IN
  • BREAKING-NEWS எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு
  • BREAKING-NEWS வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS பத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு - பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS திருச்சி: மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 71பேர் காயம்
  • BREAKING-NEWS சென்னை வண்டலூர் பூங்காவில் காணும் பொங்கலை முன்னிட்டு 3 மணி நிலவரப்படி 40,000பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS குஜராத்: அகமதாபாத்தில் வல்லபாய் படேல் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் திறப்பு

“நடுராத்திரி ஃபோனில் நடிகர் ஜான் விஜய் ஆபாசமாக பேசினார்”- ஸ்ரீரஞ்சனி புகார்

rj-sriranjini-accuses-actor-jhon-vijay-of-sexual-harassment

சர்வதேச அளவில் தொடங்கப்பட்ட #MeToo பிரச்சாரத்திற்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி வருகிறது. திரைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை #MeToo என்ற ஹேஸ்டேக் மூலம் அம்பலப்படுத்தி வருகின்றனர். பாடகி சின்மயி புகாரை அடுத்து தமிழகத்திலும் இந்த விவகாரம் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. 

கவிஞர் லீனா மணிமேகலை, பிரபல திரைப்பட இயக்குநர் சுசி கணேசன் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். அதற்கு சுசி கணேசனும் எதிர்ப்பு தெரிவித்து செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். மேலும்  லீனா மணிமேகலைக்கு எதிராக கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டுமென சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். 

இந்நிலையில் ரேடியோ ஜாக்கியும், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியுமான ஸ்ரீரஞ்சனி, நடிகர் ஜான் விஜய் மேல் புகார் கூறியுள்ளார் .இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 

"நடிகர் ஜான் விஜய் தொடர்புடைய இந்தச் சம்பவம் எனக்கு 2014-ல் நடந்தது. என்னை இதைப்பற்றி பேசவைத்த எனது கணவர் அமித் பார்கவ் மற்றும் துணிச்சலாக குரல் எழுப்பிய சின்மயி ஆகியோருக்கு நன்றி" எனக் குறிப்பிட்டிருக்கிறார். அத்துடன் அவர் இணைத்துள்ள விளக்கத்தில், "ஜான் விஜய் பெண்களிடம் மிக மோசமாக நடந்து கொள்வார். ஒருமுறை நான் அவரை பேட்டி எடுத்தேன். அந்தப் பேட்டி முடிந்து ஒரு மாதத்துக்குப் பின்னர் நள்ளிரவில் அவர் எனக்கு ஃபோன் செய்தார். நான் நல்ல தூக்கத்தில் இருந்தேன். என்னிடம் நிகழ்ச்சி ஒளிபரப்பு பற்றி நீங்கள் சொல்லாமல் விட்டுவிட்டீர்களே எனக் கேட்டார். நான் நாளை பேசுகிறேன் என்று சொன்னேன். ஆனால், அவர் தொலைபேசியில் ஆபாசமாக பேச முற்பட்டார். உங்கள் மனைவிக்கு நான் ஃபோன் செய்வதாக்கூறி அவரை மிரட்டினேன். உடனே அவர் அழைப்பைத் துண்டித்தார்'' என்று தெரிவித்துள்ளார்.

 

ஜான் விஜய் மீதான புகாரைத் தொடர்ந்து மீண்டும் பதிவிட்ட ஸ்ரீரஞ்சனி, ஜான் விஜய் மீதான என் புகாரை அடுத்து அவரின் மனைவி என்னை தொடர்புகொண்டு நடந்தவற்றை விசாரித்தார். அது குறித்து என்னிடம் வருத்தத்தையும் தெரிவித்துக்கொண்டார் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close