[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு

நடிகர் சண்முகராஜன் மீது ‘நாட்டாமை’ டீச்சர் பாலியல் புகார்

nattamai-teacher-character-rani-filed-sexual-abuse-case-on-shanmugarajan

நடிகர் சண்முகராஜன் பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

நடிகர் விக்ரம் கதாநாயகனாக நடித்த ‘ஜெமினி’ படத்தில் இடம்பெற்ற ‘ஓ போடு’ பாடல் மூலம் பிரபலமானவர் ராணி. அதற்கு முன்னரே ‘நாட்டாமை’ படத்தில் டீச்சராக நடித்து தமிழ் திரையுலகில் இடம் பிடித்தவர் இவர். இந்நிலையில் இவர் செங்குன்றத்தில் உள்ள துணிக்கடை ஒன்றின் விளம்பரத்தில் நடிப்பதற்காக அங்கு சென்றுள்ளார். 

விளம்பரத்தில் ராணியுடன் நடிகர் சண்முகராஜனும் இணைந்து நடித்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் படப்பிடிப்பின் போது சண்முகராஜன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ராணி குற்றம்சாட்டியுள்ளார். அத்துடன் தன்னை அவர் தாக்கியதாகவும் ராணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செங்குன்றம் காவல் நிலையத்தில் அவர் புகாரும் அளித்துள்ளார். 

#MeToo விவகாரத்தில் பல்வேறு பிரபலங்கள் மீது பாலியல் புகார் கிளம்பி வருகிறது. குறிப்பாக திரைத்துறையைச் சார்ந்தவர்கள் மீதும் புகார்கள் தொடர்கின்றன. கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி தெரிவித்துள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு வைரமுத்து மறுப்பு தெரிவித்துள்ளார். தன்மீது வழக்கு தொடர்ந்தால், சந்திக்க தயார் என்றும் அவர் கூறியுள்ளார். 

இந்தநிலையில் நடிகர் மீது நடிகை ஒருவர் அளித்துள்ள பாலியல் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சண்முகராஜன், ‘விருமாண்டி’ படத்தில் காவலராகவும், ‘எம்டன்’ மகன் படத்தில் கதாநாயகியின் தந்தையாகவும், ‘சண்டைக்கோழி’, ‘சிவாஜி’, ‘அந்நியன்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close