[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு
  • BREAKING-NEWS சென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

வைரமுத்து மீதும் இசைக்கலைஞர் ஒருவர் பாலியல் புகார் !

continue-sexual-harassment-complaint-on-vairamuthu

பாடலாசிரியர் வைரமுத்து மீதான பாடகி சின்மயின் பாலியல் துன்புறுத்தல் புகார் ஓய்வதற்குள் அடுத்தடுத்து இரண்டு பெண்கள் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

பாடலாசிரியர் வைரமுத்து மீது #Metoo ஹேஷ்டேக் மூலம் பாடகி சின்மயி பாலியல் துன்புறுத்தல் புகார் தெரிவித்தார். சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வைரமுத்து தன்னை பாலியல் ரீதியாக அணுகியதாக அவர் குற்றச்சாட்டை முன்வைத்தார். அதற்கு வைரமுத்தோ, வழக்கு தொடரட்டும். நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார் என தெரிவித்துவிட்டார். நான் நல்லவனா..? இல்லை கெட்டவனா..? என்பதை இப்போதே முடிவு செய்ய வேண்டாம். நீதிமன்றம் சொல்லட்டும் எனவும் வீடியோ மூலம் தன் பங்கு விளக்கத்தை கொடுத்திருக்கிறார் வைரமுத்து.

இந்நிலையில் வைரமுத்து மீது அமெரிக்காவைச் சேர்ந்த இசைக்கலைஞரான சிந்துஜா ராஜாராமும் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது குறித்து தெரிவிக்கும்போது, “ இது நடந்தது ஒரு 14 அல்லது 15 வருடங்கள் இருக்கலாம். அப்போது எனக்கு வயது 18. காஸ்மிக் ஸ்டூடியோவில் வேலைபார்த்தேன். எனது அப்பா பெங்களூருவுக்கு பணிமாற்றம் செய்யப்பட்ட காரணத்தினால் என்னை ஒரு விடுதியில் சேர்த்துவிட நல்ல விடுதியை தேடத் தொடங்கினார் என் அம்மா. இறுதியாக கோடம்பாக்கத்தில் உள்ள வைரமுத்துவின் விடுதியை நாங்கள் தேர்ந்தெடுத்தோம். காரணம் மற்ற விடுதிகளில் இருக்கும் ஒருசில கட்டுப்பாடுகள் இருந்ததாலும் வைரமுத்து திரைத்துறையை சேர்ந்தவர் என்பதால் என்னுடைய இரவு நேர வேலையை புரிந்து கொள்வார் என நினைத்தோம்.

அதனால் வைரமுத்து மூலமாகத் தான் என் அம்மா என்னை விடுதியில் சேர்த்துவிட்டார். அப்போது என் அம்மா என்னை பற்றியும் என் கெரியர் பற்றியும் அவரிடம் போனில் பேசினார். பின்னர் அவர் என்னை பார்க்க வேண்டும் என தெரிவித்ததால் என் அம்மாவும், நானும் அவர் வீட்டிற்கு சென்றோம். பின்னர் எனது பாடல்கள் அடங்கிய சிடியை அவரிடம் காட்டியபோது என்னை ஏ.ஆர். ரஹ்மானிடம் அறிமுகப்படுத்துவதாக கூறினார். அதன்படியும் செய்தார். நான் ஒரு சில காரணங்களால் அந்த விடுதியை விட்டு நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கினேன்.

பின்னர் எனது பெற்றோர்களும் பெங்களூருக்கு சென்றுவிட்டனர். அந்த நேரத்தில் என் நம்பரை வாங்கிய வைரமுத்து தொடர்ச்சியாக என்னை சந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். உனக்காக கவிதை எழுதியிருக்கிறேன். பெசன்ட் நகர் அலுவலகத்திற்கு வா சந்திக்கலாம் என தொடர்ச்சியாக பேசினார். நான் மோசமாக உணர்ந்ததால் தவிர்த்தேன். பின்னர் ஒருநாள் என்னை காதலிப்பதாக கூறினார். நான் எனக்கு நீங்கள் அப்பா மாதிரி.. உங்கள் மீது மரியாதை இருக்கிறது. இனி ஒருநாள் இப்படி பேசாதீர்கள் என கூறினேன். ஆனால் என்னை தொடர்ச்சியாக சமாதானப்படுத்த முயற்சித்தார். பின்னர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மீண்டும் என்னை தேனாம்பேட்டை அலுவலகத்திற்கு அழைத்தார். ஒருவழியாக வைரமுத்து உடனான உறவை முற்றிலுமாக துண்டித்தேன். அதுபோல என் தோழிகளுக்கும் அவரின் குணத்தை அப்போதே தெரியப்படுத்திவிட்டேன்” என்றார்.

இதேபோல நிகழ்ச்சி தொகுப்பாளருமான இன்னொரு பெண் ஒருவரும் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பெயரை சொல்லவிரும்பாத அவர் கூறும்போது, “ என்னுடைய 25 வயதில் அதாவது 1998-99 ஆம் ஆண்டில் பாடகியாக வர வேண்டும் என திரைத்துறையில் அடியெடுத்து வைத்தேன். வைரமுத்து எனக்கு அறிமுகமாகியதால் அவர் அலுவலகத்திற்கு என்னை அழைத்தார். நானும் பாடல் பாடி டெமோ செய்வதற்காக அங்கு சென்றேன். என்னை போல நிறையபேர் வந்திருந்தனர்.

பின்னர் என்னை தொடர்ச்சியாக தொலைபேசியில் அழைத்தார். ஒருநாள் விருது வாங்குவதற்காக மலேசியா செல்வதாகவும், அங்கு என்னையும் அழைத்தார். நான் பாடுவதற்காக..? அல்ல நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவா..? எனக் கேட்டேன். அதற்கு இரண்டிற்கும் இல்லை. பட்டும் படாம நடந்துக்கணும் என கூறிவிட்டு இதெல்லாம் இங்கு சகஜம் எனக் கூறினார். ஆனால் நான் அதற்கு மறுத்துவிட்டேன். உடனே முடியுமா..? டிக்கெட் போடவா என கடைசியாக ஒருமுறை கேட்டுவிட்டு உனக்காக அனைத்து வழிகளையும் நான் அடைக்கிறேன் பார் என்று எச்சரிக்கை செய்தார். அன்றிலிருந்தே நான் பாடகியாக வர வேண்டும் என்ற என் கனவு தகர்ந்தேவிட்டது. ” என வேதனையுடன் தெரிவித்தார்.

Courtesy: TheNewsMinute

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close