[X] Close
JUST IN
  • BREAKING-NEWS எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு
  • BREAKING-NEWS வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS பத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு - பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS திருச்சி: மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 71பேர் காயம்
  • BREAKING-NEWS சென்னை வண்டலூர் பூங்காவில் காணும் பொங்கலை முன்னிட்டு 3 மணி நிலவரப்படி 40,000பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS குஜராத்: அகமதாபாத்தில் வல்லபாய் படேல் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் திறப்பு

'சினிமாவில் எல்லாம் சம்மதத்துடனே நடக்கிறது' நடிகை ஷில்பா ஷிண்டே

shilpa-shinde-says-no-rape-in-industry-everything-is-mutual

சினிமா துறையில் பலாத்காரமே இல்லை, எல்லாம் முழு சம்மதத்துடனே நடப்பதாக பாலிவுட் நடிகை ஷில்பா ஷிண்டே தெரிவித்துள்ளார்.

சமீப நாட்களாக பாலியல் அத்துமீறல்கள் குறித்தும் இணையத்தில் கொடுக்கப்படும் மன உளைச்சல்கள் குறித்தும் தைரியமாக பெண்கள் குரல் கொடுத்து வருகின்றனர். சினிமா, பத்திரிக்கை உள்ளிட்ட பல துறைகளை சேர்ந்த பெண்களும் தினம் தினம் ட்விட்டரில் #metoo என்ற ஹேஷ்டேக் மூலம் பாலியல் அத்துமீறல்கள் குறித்து தெரிவித்து வருகின்றனர்.

 

பாலிவுட்டில் பிரபல திரைப்பட இயக்குநர் நானா படேகர் மீது இந்தி நடிகை புகார் தெரிவித்தார். அவருக்கு ஏராளமான பிரபலங்கள் ஆதரவு தெரிவித்ததால், அவரைத் தொடர்ந்து நடிகை கங்கனா ரனாவத் உள்ளிட்ட பிரபலங்களும், பணியின் போது தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை பகிரங்கமாக கூறினர். தமிழில் திரைப்பட பின்னணி பாடகி சின்மயி-யும்  #metoo ஹேஸ்டேக் மூலம் பரபரப்பை ஏற்படுத்தினார். 

இந்நிலையில் இது குறித்து பேசிய பாலிவுட்டைச் சேர்ந்த சின்னத்திரை நடிகை ஷில்பா ஷிண்டே, ''மீ டூ பிரசாரம் ஒரு குப்பை. அந்த நேரத்தை நீங்கள் எளிதாக கடந்து வர வேண்டும். அப்போது மட்டுமே அதைப்பற்றி பேச வேண்டும். நீங்கள் தாமதமாக குரல் கொடுத்தால் உங்களை யாரும் கவனிக்க மாட்டார்கள்.  எனக்கும் இது போன்ற ஒரு அனுபவம் கிடைத்துள்ளது.  என்று தெரிவித்தார். 

மேலும் எல்லா இடங்களிலும் இந்த விஷயங்கள் நடக்கின்றன. சினிமா துறை மோசமானதல்ல நல்ல துறை தான். இந்தத்துறையின் பெயரை ஏன் கெடுக்கிறார்கள் என தெரியவில்லை. இந்தத்துறையில் கட்டாயப்படுத்தி யாரும் பலாத்காரம் செய்யப்படுவதில்லை. எல்லாம் பரஸ்பர புரிதலில் நடக்கும் கொடுக்கல் வாங்கல் முறைதான். உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் அதை தவிர்த்துவிடுங்கள்'' என தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close