[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS திமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

பாலியல் புகார்களை விசாரிக்க கர்நாடக சினிமாவில் தனிக் குழு!

actors-forum-forms-panel-to-deal-with-sexual-abuse-plaints

இந்தியாவில் #MeToo பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நடிகை தனுஸ்ரீ தத்தா, நானா படேகர் மீது பாலியல் புகார் கூறியதைத் தொடர்ந்து மற்ற நடிகர்களும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை இந்த ஹேஷ்டேக்கில் பகிர்ந்து வருகின்றனர். நடிகை கங்கனா ரனவத், குயின் இயக்குனர் மீதும் நடிகை புளோரா தயாரிப்பாளர் மீதும் புகார்களை கூறினர். இந்திய பட இயக்குனர் சஜித் கான் மீதும் புகார்கள் கூறப்பட்டன. இதையடுத்து ஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர், இயக்குனர் சஜித் கான் விலகினர். தமிழ் சினிமாவில் பாடகி சின்மயி, பாடலாசிரியர் வைரமுத்து மீது பரபரப்பு புகாரை கூறியுள்ளார்.

இந்நிலையில், #MeToo புகார் தொடர்பாக விசாரிக்க 4 ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு அமைக்கப் படும் என மத்திய அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.

’தமிழ்த்திரைத்துறையில் இப்புகார்களை விசாரிக்க, 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும்’ என்று நடிகர் விஷால் நேற்று தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், கன்னட சினிமாவில் உரிமை மற்றும் சமத்துவத்துக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள அமைப்பில் பாலியல் தொல் லைக் குறித்து விசாரிக்க குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் நடிகர் சேதன் குமார், நடிகைகள் பிரியங்கா உபேந்திரா, ஸ்ருதி ஹரிஹரன், இயக்குனர் கவிதா லங்கேஷ் ஆகியோர் இதில் இடம்பெற்றுள்ளனர். 30-க்கும் மேற்பட்ட நடிகர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்து கர்நாடக பிலிம் சேம்பர் தலைவர் சின்னி கவுடாவிடம் மனு கொடுத்தனர்.

இதுபற்றி சேதன் குமார் கூறும்போது, ‘பாலியல் தொல்லைகள் குறித்தும் பட வாய்ப்புக்காக படுக்கையை பகிரும் சம்பவங்கள் தொடர்பான புகார்கள் பற்றியும் நீதிமன்றத்துக்கு செல்லும் முன் இந்தக் குழு முதலில் விசாரிக்கும்’ என்றார். இந்தக் குழு பாலி யல் விஷயங்களை மட்டுமல்லாமல், நடிகைகளின் சம்பள பிரச்னை உள்ளிட்ட புகார்கள் குறித்தும் விசாரிக்கும் என்று கூறப் பட்டுள்ளது.

‘இந்தக் குழுவை எப்படி அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்வது என்பது பற்றி வரும் 26ஆம் தேதி பேசி முடிவெடுப்போம்’ என்றார் கர்நாடக பிலிம்சேம்பர் தலைவர் சின்னி கவுடா.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close