[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS புதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகள் உயர்ந்து ரூ.72.94க்கு விற்பனை செய்யப்படுகிறது
  • BREAKING-NEWS மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்

ரஹ்மானுக்கு தவறுதலாக வீடியோகால் செய்த குழந்தை - மகிழ்ச்சியில் இசைப்புயல்

ar-rahman-have-wrong-video-call-and-got-happy-mode

‘2.0’ படத்தின் இசைப்பணி தொடர்பாக ஏ.ஆர்.ரஹ்மான் இருந்த போது குழந்தை ஒன்று தெரியாமல் அவருக்கு வீடியோ கால் செய்துவிட்டது.

பிரபல இந்தியப் பாடகர் அட்னன் சமி கான். இவர் இந்தி திரையுலகில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் திகழ்கிறார். இவர் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் சிறந்த நண்பரும் ஆவார். இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் நிகழ்ந்த சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்று குறித்து அட்னன் ட்விட்டரில் பதிவிட, அதற்கு ரஹ்மானும் பதில் அளித்துள்ளார். 

அதில், “அடடே.. எனது போன்கள் மற்றும் டேப்களுக்கு பாஸ்வேர்ட் போடும் நேரம் வந்துவிட்டது. எனது செல்ல மகள் மெடினா எனது போனை எடுத்து, ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஃபேஸ்கால் செய்துவிட்டார். அப்போது ஏ.ஆர்.ரஹ்மான் லண்டனில் 2.0 படத்தின் இசைப்பணியில் இருந்துள்ளார். அந்த போனில் ரஹ்மான் ஸ்டுடியோவை எனது மகள் பார்த்துள்ளார். ஆச்சர்யமானது” என்று தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள ரஹ்மான், உங்கள் மகளின் ஃபேஸ்கால்தான் எனது மன நெருக்கடியை குறைந்தது. மெடினாவிற்கு எனது நன்றிகள். அவருக்கு இறைவன் அனைத்து வல்லமைகளையும் வழங்கட்டும் என வாழ்த்தியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close