[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

வெளியானது விஜய்சேதுபதியின் ‘சூப்பர் டீலக்ஸ்’ ஃபர்ஸ்ட் லுக்

multi-starrer-first-look-of-vijay-sethupathi-s-super-deluxe-movie

‘ஆரண்ய காண்டம்’ படத்தின் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியானது.

நடிகர் விஜய் சேதுபதி நடிக்க ‘ஆரண்யக் காண்டம்’ படத்தின் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கி வரும் படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஷில்பா என்ற பெயரில் திருநங்கையாக நடித்துள்ளார் எனக் கூறப்படுகிறது. மேலும் இந்தப் படத்தில் மலையாள படத்தின் முன்னணி ஹீரோ ஃபகத் ஃபாசில், நடிகைகள் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, இயக்குனர் மிஷ்கின் உட்பட பலர் நடித்துள்ளனர். 

இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ‘ஆரண்ய காண்டம்’ திரைப்படத்தின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்த தியாகராஜன் குமாரராஜா இரண்டாவது திரைப்படம் என்பதால் இந்தப் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் பெண் வேடத்தில் வெளியான விஜய் சேதுபதியின் படத்தை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். அடுத்தடுத்து விஜய் சேதுபதியின் படம் வெளியாகி வந்த நிலையில் ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் குறித்த தகவலுக்கு ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில் இன்று வெளியிடப்படும் என விஜய் சேதுபதி அறிவித்தார். அதன்படி விஜய்சேதுபதி, சமந்தா, ரம்யா கிருஷ்ணன், ஃபகத் ஃபாசில் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்ற ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியானது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து  வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close