[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்
  • BREAKING-NEWS மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை மற்றும் புறநகர் பகுதியின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை
  • BREAKING-NEWS சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்கலாம் என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முழு அடைப்பு போராட்டம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த ரேஷன் கடை ஊழியர்களின் ஸ்டிரைக் வாபஸ்
  • BREAKING-NEWS தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் - தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கம்
  • BREAKING-NEWS சபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் - கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

“ஒரு வழியா, செமயா, சூப்பரா” - விஜய் சேதுபதி ஹேப்பி!

first-look-of-superdeluxe-will-be-released-on-the-8th-of-october

‘ஆரண்ய காண்டம்’ படத்தின் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அக்டோபர் 8ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

நடிகர் விஜய் சேதுபதி நடிக்க ‘ஆரண்யக் காண்டம்’ படத்தின் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கி வரும் படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஷில்பா என்ற பெயரில் திருநங்கையாக நடித்துள்ளார் எனக் கூறப்படுகிறது. மேலும் இந்தப் படத்தில் மலையாள படத்தின் முன்னணி ஹீரோ ஃபகத் ஃபாசில், நடிகைகள் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, இயக்குனர் மிஷ்கின் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 

‘ஆரண்ய காண்டம்’ திரைப்படத்தின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்த தியாகராஜன் குமாரராஜா இரண்டாவது திரைப்படம் என்பதால் இந்தப் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் பெண் வேடத்தில் வெளியான விஜய் சேதுபதியின் படத்தை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். அடுத்தடுத்து விஜய் சேதுபதியின் படம் வெளியாகி வந்த நிலையில் ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் குறித்த தகவலுக்கு ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில் ‘சூப்பர் டீலக்ஸ்’ குறித்த செய்தியை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் ''ஒரு வழியா, கடைசியா, செமயா, சூப்பரா எனக்கு ரொம்ப பிடிச்ச இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தோட பர்ஸ்ட் லுக் அக்டோபர் 8ம் தேதி ரிலீஸ் ஆகுது'' எனத் தெரிவித்துள்ளார்.

‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் இந்த அதிகாரப்பூர்வ அப்டேட்டை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close