[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரூ.1,258 கோடியில் மதுரையில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது
  • BREAKING-NEWS 2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி - மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அறிவிப்பு
  • BREAKING-NEWS மோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

 “என்னைபோல விஜய்சேதுபதி வலியை சுமக்கக்கூடாது” -  விட்டுக் கொடுத்த விஷால்  

vishal-relieves-vijay-sethupathi-out-of-96-issue-says-friendship-means-a-lot-than-money

‘96’ திரைப்பட ரிலீஸ் விவகார பிரச்னையில் ரூ.1.50 கோடியை விஜய்சேதுபதிக்கு கொடுக்க விஷால் முடிவு  செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. 

விஜய் சேதுபதி, த்ரிஷா  நடிப்பில் ‘96’ திரைப்படம் நேற்று முன் தினம் வெளியானது. இந்நிலையில்,தயாரிப்பாளர் நந்தகோபாலுக்கு ரூ.1.50 கோடி தொகையை பைனான்ஸ் மூலம் நடிகர் விஷால் தரப்பில் வாங்கிக்கொடுக்கப்பட்டது. அந்தத் தொகையை தயாரிப்பாளர் நந்தகோபால் ‘96’ பட  ரிலீஸின்போது திரும்ப தறுவதாக கூறியதால் நேற்று  பட ரிலீஸுக்கு முன்பு வரை அது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை சரியான முடிவை எட்டாததை அடுத்து ‘96’ படத்தின் நாயகன் விஜய்சேதுபதி அந்தத் தொகையை தருவதாக கூறிய பிறகு பிரச்னை தீர்ந்து ‘96’ படம் ரிலீஸானது. 

இது தொடர்பாக தற்போது விஷால் தரப்பில் விசாரித்தபோது,  “விஷால் தொடர்ந்து பைனான்ஸ் ரீதியாக பல வலிகளை சந்தித்து வருகிறார். அந்த மாதிரி ஒரு வலியை நடிகர் விஜய்சேதுபதிக்கு கொடுக்க அவர் விரும்பவில்லை. இந்தச் சம்பவத்துக்கு பிறகு நேற்று இரவு முழுக்க அவர் உறங்கவும் இல்லை. ஆகவே, விஜய்சேதுபதி கொடுப்பதாக கூறியுள்ள ரூ.1.50 கோடி தொகையை தர வேண்டாம். அதற்கான பொறுப்பை மீண்டும் விஷாலே ஏற்றுக்கொள்கிறார். நந்தகோபாலுக்கு பைனான்ஸ் மூலம் வாங்கிக்கொடுத்த ரூ1.50 கோடி தொகையை விஷால், அவரிடமே பெற்றுக்கொள்ள முடிவு செய்திருக்கிறார்.  அதுவரை அந்தத் தொகைக்கு விஷாலே வட்டியும் கட்டுவார். ஆகவே, பைனான்ஸ் விஷயத்தில் தான் சுமக்கும் வலியை விஜய்சேதுபதி சுமக்க வேண்டாம் என்று விஷால் நினைக்கிறார்”  இவ்வாறு விஷால் தரப்பில் கூறப்படுகிறது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close