[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்

“மாடியில நிக்குற மான்குட்டி.” - கானா வரிகளில் கலக்கும்‘வடசென்னை’டீசர் 

bubbling-with-youthfulness-dhanush-s-vada-chennai-song-teaser

கானா பாலாவின் குரலில் உருவாகியுள்ள ‘வடசென்னை’ பாடல் டீசரை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். 

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வடசென்னை’. இவரது இயக்கத்தில் நடிகர் தனுஷ் மூன்றாவதாக இணைந்துள்ளார். முன்னதாக இந்தக் கூட்டணி ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ ஆகிய வெற்றிப்படங்களை கொடுத்துள்ளது. ‘வடசென்னை’யில்  சமுத்திரகனி, கிஷோர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

சென்னையை மையப்படுத்திய கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் ஏற்கெனவே வெளியாகியிருந்தது.

இந்தத் திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். அக்டோபர் 18ம் தேதி திரைப்படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் சீனாவில் நடைபெற உள்ள பிங்யாவோ சர்வதேச திரைப்பட விழாவில் இதனை திரையிட உள்ளதாக படக்குழு தெரிவித்தது.

 அக்டோபர் மாதம் 11 முதல் 20ஆம் தேதி வரை சீனாவில், பிங்யாவோ சர்வதேச திரைப்பட விழா நடைபெற உள்ளது. அதில்தான் இதனை திரையிட உள்ளார்கள்.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘மாடியில நிக்குற மான்குட்டி..மேல வா காட்டுறேன் ஊரை சுத்தி’ பாடலின் டீசரை வெளியிட்டுள்ளது படக்குழு. கானா பாலாவின் குரலில் வடசென்னை கலாச்சாரத்தை காட்சிப்படுத்தும் வரிகள் இதில் இடம்பெற்றுள்ளன. அதில் தனுஷ் மிகவும் இளமை தோற்றத்தில் உள்ளார். மேலும் ஐஸ்வர்யா ராஜேஷுடன் அவர் நெருங்கி காதல் செய்யும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. ஐஸ்வர்யா அசலான மெட்ராஸ் பாஷையில் பேசுவதை கவனிக்க முடிகிறது. இந்த டீசரை தனுஷ் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close