[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

திலீப் விவகாரத்தில் இன்னும் பதில் இல்லை: நடிகைகள் போர்க்கொடி!

amma-yet-to-respond-to-women-s-collective-plea

கேரள நடிகர் சங்கமான ‘அம்மா’வில் திலீப் இருக்கிறாரா, இல்லையா என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் என்று எழுப்பிய கேள்விக்கு சங்கம் இதுவரை பதிலளிக்க வில்லை என்று நடிகை ரேவதி கூறியுள்ளார்.

கேரளாவில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், பிரபல நடிகையை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மலையாள முன்னணி நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். இதனால் கேரள நடிகர் சங்கமான 'அம்மா'வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். 85 நாள்கள் சிறைவாசத்து க்குப் பின் ஜாமினில் வெளியே வந்தார் திலீப். இதையடுத்து ’அம்மா’வுக்கு புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட மோகன்லால் பொதுக்குழு வைக் கூட்டி, திலீப்பை மீண்டும் சேர்ப்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றினார். இந்த முடிவுக்கு ரேவதி, பார்வதி, பத்மப்பிரியா, ரீமா கல்லிங் கல் உள்ளிட்ட திரைப்பட பெண்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த நடிகைகள் எதிர்ப்பு தெரிவித்தனர். சில நடிகைகள் நடிகர் சங்க பொறுப்பில் இருந்து ம் விலகினர். இதையடுத்து திலீப்பை மீண்டும் சேர்ப்பது பற்றிய தங்கள் முடிவை ’அம்மா’ மாற்றியது. இந்நிலையில் நடிகர் திலீப், ‘நிரபராதி என்று நிரூபித்துவிட்டு சங்கத்தில் இணைகிறேன்’ என்று கூறினார்.

இந்நிலையில் திலீப்பை மீண்டும் சேர்ப்பது பற்றி எப்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று திரைப்பட பெண்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த நடிகைகள் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக நடிகர் சங்கத்துக்கு கடிதம் அனுப்பினர். இரண்டு மாதங்கள் ஆகியும் இந்த கடிதத்துக்கு பதில் வரவில்லை என்று நடிகைகள் தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி நடிகை ரேவதி கூறும்போது, ‘நடிகர் சங்கத்தில் திலீப் இருக்கிறாரா? இல்லையா? என்பதை சங்கம் தெளிவுப்படுத்த வேண்டும் என்றுதான் கேட்கிறோம். ஆனால், அதற்கு இன்னும் பதில் வரவில்லை. அதோடு பாலியல் தொடர்பான விவகாரங்களில் சங்க உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களை நீக்க, விதியில் திருத்தம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். பத்து நாட்களில் கலந்து பேசி முடிவு செய்வோம் என்றனர். இதுவரை அதற்கும் பதிலில்லை’ என்று தெரிவித்துள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close