[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS இன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்!
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்
  • BREAKING-NEWS சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
  • BREAKING-NEWS நாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது
  • BREAKING-NEWS வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்

திரையுலகின் தளபதி விஜய் தான்: உதயநிதி ஸ்டாலின்

vijay-is-the

விஜய்யை தளபதி என அழைப்பதை திமுகவினர் ஏற்பார்‌களா? என்ற ட்விட்டர் கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் பதில்.

திரையுலகின் தளபதி நடிகர் விஜய் தான் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். ஸ்டாலினை திமுக தொண்டர்கள் தளபதி என அழைத்து வருகின்றனர். இந்நிலையில், இளையதளபதி என விஜயை அழைத்து வந்த அவரது ரசிகர்கள் மெர்சல் படத்திற்குப் பிறகு அவரை தளபதி என அழைக்கத் தொடங்கியுள்ளனர். நேற்றைய சர்க்கார் திரைப்பட இசைவெளியீட்டு விழாவின் போதும் நடிகர் விஜய், தனது அரசியல் ஆசையை வெளிப்படுத்தியிருந்தார். இந்தநிலையில், சமூக வலைதளத்தில் இளைஞர் ஒருவர் நடிகர் விஜய் தளபதி என அழைக்கப்படுவதை திமுகவினர் ஏற்கிறார்களா என கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ள உதயநிதி ஸ்டாலின், திரையுலகில் தளபதி என்றால் அது விஜய் அண்ணா தான் என்றும், தல என்றால் அஜித் தான் என்றும் விளக்கமளித்துள்ளார்

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close