[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS இன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்!
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்
  • BREAKING-NEWS சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
  • BREAKING-NEWS நாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது
  • BREAKING-NEWS வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்

நானா படேகரின் நோட்டீஸ் பயமுறுத்துவதற்குதான்: தனுஸ்ரீ தத்தா

i-haven-t-received-any-notice-from-nata-patekar-tanushree-dutta

நானா படேகர் நோட்டீஸ் அனுப்புவது, என்னை போன்ற நடிகைகளை மிரட்டத்தான் என்று நடிகை தனுஸ்ரீ தத்தா கூறியுள்ளார்.

’காலா’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தவர் நானா படேகர். பிரபல பாலிவுட் நடிகரான இவர் மீது, நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் குற்றச்சாட்டை கூறியிருந்தார். இவர், தமிழில் ’தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் நடித்தவர். 

‘2008-ஆம் ஆண்டு 'ஹார்ன் ஓகே ப்ளீஸ்' என்ற படத்தின் பாடல் காட்சிகள் படமாக்கப்படும் போது, நானா படேகர் பாலியல் தொல்லை தந்தார். ஹீரோயின் மட்டுமே இடம்பெறக்கூடிய அந்த பாடலில் வலுக்கட்டாயமாக உள்ளே நுழைந்த அவரை நான் கண்டித்த போது, ’எனக்கு பிடித்ததை செய்வேன், என்னை யாரும் தட்டிக் கேட்க முடியாது’ என்று சத்தமாகச் சொன்னார். நானா படேகரின் இந்த செயலுக்கு படக் குழுவினர் ஆதரவாக செயல்பட்டனர்.இதுகுறித்து நான் வெளியே கூறியதால் நானா படேகர் ஆதரவாளர்களின் மிரட்டலுக்கு ஆளானேன். 

Read Also -> “எல்லோருக்குள்ளும் வாழும் அந்த பழைய காதல்” பேரன்பாய் வருடும் ‘96’ 

என் குடும்பத்தினரோடு காரில் சென்ற போது அவரது ஆதரவாளர்களால் தாக்கப்பட்டோம். ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார் போன்ற பெரிய நடிகர் கள் அவருடன் நடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். அப்போது நான் புதுமுக நடிகை என்பதால், எனக்கு எதிராக செய்திகள் பரப்பப்பட்டன. நானா படேகரைப் போன்ற ஆட்கள் பெண்களின் முன்னேற்றம் மற் றும் பாதுகாப்பு குறித்து பேசுவது நகைச்சுவையாக உள்ளது. என்னைப் போல தற்போது பல புதுமுகங்களும் இதுபோன்ற வலிகளை சுமந்து கொண்டுதான் இருக்கின்றனர்’ என கூறி இருந்தார். இதை அந்தப் படத்தில் பணியாற்றிய நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா மறுத்திருந்தார். இவர், தமிழில் ஜீவாவின் ’ரவுத்திரம்’ படத்தில் நடித்தவர்.

‘கணேஷ் பொய்யர். அவர் இரண்டு முகம் கொண்ட மனிதர். பத்துவருடத்துக்கு முன் எனக்கு நடந்த அந்த பாலியல் தொல்லை சம்பவத்துக்கு உடந்தையாக இருந்தவர் அவர்’ என்று அவருக்கு பதில் கூறியிருந்தார் தனுஸ்ரீ. 


இந்நிலையில் இந்தப் புகாரை மறுத்துள்ள நானா படேகர், இது பொய்யான புகார். அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லை என்றால் வழக் குத் தொடர்வேன் என்று கூறியிருந்தார். அவர் வழக்கறிஞர் ராஜேந்திரா சிரோட்கர் கடந்த வெள்ளிக்கிழமை  அவருக்கு நோட்டீஸ் அனுப்பிய தாகத் தெரிவித்தார். 

Read Also -> பிரபல நடிகை லட்சுமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

தனுஸ்ரீக்கு ஆதரவாக பிரபலமான இந்தி நடிகைகள், டிவிங்கிள் கண்ணா, பிரியங்கா சோப்ரா, சோனம் கபூர், பரினீதி சோப்ரா, ஸ்வாரா பாஸ்கர், ரிச்சா சதா உள்ளிட்ட சிலர் தனுஸ்ரீக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில் நானா படேகர் அனுப்பிய வக்கீல் நோட்டீஸ் பற்றி தனுஸ்ரீயிடம் கேட்டபோது, ‘இதுவரை எனக்கு எந்த நோட்டீஸும் வரவில்லை. இதுபோன்ற அச்சுறுத்தல்கள், என்னை போன்று புகார் சொல்ல முன் வரும் நடிகைகளை பயமுறுத்தத்தான். பாலியல் தொல்லைக்கு ஆளான நடி கைகள் இதுபோன்ற மிரட்டல் தந்திரங்கள் பற்றி கவலைப்படத் தேவையில்லை. இந்த தேசம் ஆதரவாக இருக்கும்’ என்று கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : Nata PatekarTanushree DuttaNotice
Advertisement:
Advertisement:
[X] Close