[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS புதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகள் உயர்ந்து ரூ.72.94க்கு விற்பனை செய்யப்படுகிறது
  • BREAKING-NEWS மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்

அடுத்த பட ஷூட்டிங்: ஐரோப்பா செல்லும் பிரபாஸ், பூஜா !

prabhas-and-pooja-are-flying-off-to-europe-this-week

பெயரிடப்படாத படத்தின் ஷூட்டிங்கிற்காக நடிகர் பிரபாஸூம் நடிகை பூஜா ஹெக்டேவும் ஐரோப்பா செல்கின்றனர்.

பாகுபலி படத்தின் ஹிட்டுக்குப் பிறகு பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் படம், ‘சாஹோ’. இதில் இந்தி நடிகை ஸ்ரத்தா ஹீரோயினாக நடிக்கிறார். அருண்விஜய், நீல் நிதின் முகேஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப் படம், தமிழ், தெலுங்கு, இந்தியில் உருவாகிறது. சுஜீத் ரெட்டி இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் மும்பை, அபுதாபி, துபாய், ரொமானியா ஆகிய பகுதிகளில் நடந்துள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன.

இதையடுத்து தெலுங்கு பட இயக்குனர் ராதா கிருஷ்ணகுமார் இயக்கும் படத்தில் நடிக்கிறார் பிரபாஸ். பெயரிடப்படாத இந்தப் படத்தில் பிரபாஸ் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர் தமிழில் ’முகமூடி’ படத்தில் நடித்தவர். இந்தப் படமும் தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் உருவாகிறது. இதன் படப்பிடிப்பு இந்த வாரம் ஐரோப்பாவில் தொடங்குகிறது. இதற்காக இந்த வாரம் பிரபாஸ், பூஜா அங்கு செல்கின்றனர். அங்கு 30 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close