[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்
  • BREAKING-NEWS மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா
  • BREAKING-NEWS என் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்
  • BREAKING-NEWS தென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்
  • BREAKING-NEWS பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா என தகவல்

வெளியானது சர்க்காரின் ‘ஒருவிரல்புரட்சி’

sarkar-2nd-track-released-oru-viral-puratchiye

நடிகர் விஜய் நடித்துள்ள சர்க்கார் படத்தின் ‘ஒருவிரல்புரட்சி’ என்ற பாடல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் நடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘சர்க்கார்’. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 2ம் தேதி சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. படத்தின் சிமிட்டாங்காரன் என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இருப்பினும் அந்த பாடலை யூ டியூப்பில் 13 மில்லியனுக்கும் அதிகமானோர் கண்டு ரசித்துள்ளனர். 

இந்நிலையில் படத்தின் மற்றொரு பாடலான '' ஒரு விரல் புரட்சி'' என்ற பாடல் வெளியாகியுள்ளது. 5.30 நிமிடங்கள் உள்ள இந்தப் பாடலில் ஓட்டுப்போடுவதன் முக்கியத்துவம், நாட்டின் நிலை மற்றும் அரசியல் தொடர்பான வரிகள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் இளைஞர்களுக்கு கருத்து சொல்லும் வகையில் இந்தப் பாடல் எழுதப்பட்டிருப்பது தெரிகிறது. இந்தப் பாடலை விஜய் ரசிகர்கள் வேகமாக பரப்பி வருகின்றனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close