[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்

'எனக்கு ஆதரவா பேசறீங்க, ஆனா, உங்க கணவர்? முன்னாள் ஹீரோயினுக்கு தனுஸ்ரீ கேள்வி!

what-about-akshay-kumar-working-with-nana-patekar-asks-tanushree-to-twinkle-khanna

’எனக்காக குரல் கொடுத்ததற்கு நன்றி. ஆனால், உங்கள் கணவர் அக்‌ஷய்குமார் இப்படி செய்யலாமா?’ என்று  நடிகை டிவிங்கிள் கண்ணாவுக்கு நடிகை தனுஸ்ரீ தத்தா கேள்வி எழுப்பியுள்ளார். 

’காலா’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தவர் நானா படேகர். பிரபல பாலிவுட் நடிகரான இவர் மீது, நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் குற்றச் சாட்டை கூறியிருந்தார். இவர், தமிழில் ’தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் நடித்தவர். 

‘2008-ஆம் ஆண்டு 'ஹார்ன் ஓகே ப்ளீஸ்' என்ற படத்தின் பாடல் காட்சிகள் படமாக்கப்படும் போது, நானா படேகர் பாலியல் தொல்லை தந்தார். ஹீரோயின் மட்டுமே இடம்பெறக்கூடிய அந்த பாடலில் வலுக்கட்டாயமாக உள்ளே நுழைந்த அவரை நான் கண்டித்த போது, ’எனக்கு பிடித்ததை செய்வேன், என்னை யாரும் தட்டிக் கேட்க முடியாது’ என்று சத்தமாகச் சொன்னார். நானா படேகரின் இந்த செயலுக்கு படக் குழுவினர் ஆதர வாக செயல்பட்டனர். 

இதுகுறித்து நான் வெளியே கூறியதால் நானா படேகர் ஆதரவாளர்களின் மிரட்டலுக்கு ஆளானேன். என் குடும்பத்தினரோடு காரில் சென்ற போது அவரது ஆதரவாளர்களால் தாக்கப்பட்டோம். 

(ட்விங்கிள் கண்ணா)

ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார் போன்ற பெரிய நடிகர்கள் இவ்வாறான நடிகருடன் நடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் இதுபோன் ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். அப்போது நான் புதுமுக நடிகை என்பதால், ஹீரோயின் ஒழுங்கா கோ-ஆபரேட் பண்ண லை’ என்று எனக்கு எதிராக செய்திகள் பரப்பப்பட்டன. நானா படேகரைப் போன்ற ஆட்கள் பெண்களின் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பு குறித்து பேசுவது நகைச்சுவையாக உள்ளது. என்னைப் போல தற்போது பல புதுமுகங்களும் இது போன்ற வலிகளை சுமந்து கொண்டுதான் இருக்கின்ற னர்’ என கூறி இருந்தார்.

இதை அந்தப் படத்தில் பணியாற்றிய நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா மறுத்திருந்தார். இவர், தமிழில் ஜீவாவின் ’ரவுத்திரம்’ படத்தில் நடித்தவர்.

 ‘கணேஷ் பொய்யர். அவர் இரண்டு முகம் கொண்ட மனிதர். பத்துவருடத்துக்கு முன் எனக்கு நடந்த அந்த பாலியல் தொல்லை சம்பவத்துக்கு உடந்தையாக இருந்தவர் அவர்’ என்று அவருக்கு பதில் கூறியிருந்தார் தனுஸ்ரீ. இந்நிலையில் இந்தப் புகாரை மறுத்துள்ள நானா படேகர், இது பொய்யான புகார். அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லை என்றால் வழக்குத் தொடர்வேன் என்று கூறியிருந்தார். இந்நிலை யில் இயக்குனர் விவேக் அக்னிகோத்ரி மீதும் பரபரப்பு புகார் சொல்லி இருந்தார் தனுஸ்ரீ. 

இதையடுத்து தனுஸ்ரீக்கு ஆதரவாக பிரபலமான இந்தி நடிகைகள், பிரியங்கா சோப்ரா, சோனம் கபூர், பரினீதி சோப்ரா, ஸ்வாரா பாஸ்கர், ரிச்சா சதா உட்பட பலர் கருத்துத் தெரிவித்திருந்தனர். அதில் ஒருவர், முன்னாள் ஹீரோயின் டிவிங்கிள் கண்ணா. இவர் பிரபல இந்தி ஹீரோ அக்‌ஷய் குமாரின் மனைவி. 

டிவிங்கிள் கண்ணாவுக்கு நன்றி தெரிவித்துள்ள தனுஸ்ரீ, ‘எனக்காக குரல் கொடுத்ததற்கு நன்றி. ஆனால், உங்கள் கணவர் (அக்‌ஷய்குமார்) அவருடன் ’ஹவுஸ்புல் 4’ படத்தில் நடித்துவருகிறார். உங்கள் ஆதரவை எந்தளவுக்கு ஏற்றுக்கொள்ள முடியும்? பெண்களை தவறாக நடத்து பவர்களை தனிமைப்படுத்த வேண்டும் என்று கூறிவருகிறேன். ஆனால் உங்கள் கணவர் இப்படி செய்வது என்ன நியாயம்? அவர்கள் என்னிடம் மன்னிப்புக் கேட்கவில்லை. ஆனால் தொடர்ந்து என்னைப் பற்றி பல பொய்யான கதைகளை சொல்லி வருகிறார்கள்’ என்று கூறியுள்ளார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close