[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்

வாரணாசியில் ரஜினியின் ’பேட்ட’ ஷூட்டிங்: த்ரிஷா ஜில்!

trisha-will-join-petta-sets-tomorrow

ரஜினியின் ’பேட்ட’ பட ஷூட்டிங்கில் நாளை இணைகிறேன் என்று நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.

‘காலா’ மற்றும் ‘2.0’ படங்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் படம் ’பேட்ட’. கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். சிம்ரன், த்ரிஷா, மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, இந்தி நடிகர் நவாஸூதின் சித்திக், மேகா ஆகாஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக் கிறார். இதன் முதல் ஷெட்யூல் டார்ஜிலிங்கில் நடந்தது. அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு லக்னோவில் நடந்தது. இப்போது வாரணாசியில் நடக்கிற து. இதில் நாளை நடக்கும் படப்பிடிப்பில் த்ரிஷா கலந்துகொள்கிறார். 

இதுபற்றி த்ரிஷா கூறும்போது, ‘ ரஜினியுடன் எப்போது நடிப்பீர்கள் என்று கேட்டுக்கொண்டே இருந்தார்கள். ஒரு ரசிகையாக அந்த கேள்வி எனக் கு உறுத்தலாகவே இருந்தது. இப்போது அந்த கேள்வி முடிவுக்கு வந்திருக்கிறது. ’பேட்ட’ ஷூட்டிங்கில் 1 ஆம் தேதி (நாளை) முதல் இணை கிறேன். வாரணாசியில் படப்பிடிப்பு. அங்கு ஒரு மாதம் இருக்கிறேன். ரஜினியுடன் நடிப்பதால் என் சினிமா கேரியர் முழுமை பெற்றதாக நினைக் கிறேன். முதலில் நான் ரஜினியின் ரசிகை. பிறகுதான் அவருடன் நடிக்கும் நடிகை. அவரை பலமுறை சந்தித்து பேசியிருக்கிறேன். அவருடன் பணியாற்றுவது கண்டிப்பாக எனக்கு வேறுவிதமாக இருக்கும்’ என்றார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close