[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா!
  • BREAKING-NEWS பெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது! - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்
  • BREAKING-NEWS நீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS முதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு

செல்ல நாய்க்குட்டிக்காக சைவத்துக்கு மாறிய தமன்னா!

tamannaah-bhatia-turns-vegetarian

தனது வீட்டில் வளர்க்கும் செல்ல நாய்க்குட்டிக்காக அசைவத்தில் இருந்து சைவத்துக்கு மாறிவிட்டதாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.

இதுபற்றி நடிகை தமன்னா கூறும்போது, ‘நான் அசைவ பிரியையாக இருந்தேன். எப்போதும் மீன் மற்றும் இறைச்சிகளை சாப்பிடுவது வழக்கம். எனது வீட்டில்  பெப்பிள் என்ற செல்ல நாய் இருக்கிறது. கடந்த மாதம் அதற்கு உடல் நலமில்லாமல் போனது. அது எங்கள் செல்ல வளர்ப்புப் பிராணி மட்டுமல்ல, எங்கள் குடும்பத்து உறுப்பினர்.

அதன் மீது எனக்கு பாசம் அதிகம். உடல்நலமில்லாமல் அதை பார்க்க எனக்கு வருத்தமாக இருந்தது. என் நேசத்துக்குரிய ஒன்றுக்காக எதையாவது விட்டுவிடலாம் என நினைத்தேன். சிறு தியாகம் செய்ய தீர்மானித்தேன். அசைவம் சாப்பிடுவதை விட்டுவிட்டேன். இது சவாலானதுதான்’ என்று தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close