[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS விங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு

“போங்கடா நீங்களும் உங்க கல்யாணமும்” - விஜய்சேதுபதியை கலாய்த்த பாட்டி 

chekka-chivantha-vaanam-one-minute-video-is-released

‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் ஒருநிமிட காட்சி சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.  

விஜய்சேதுபதி, அருண் விஜய், சிம்பு என பல நட்சத்திரங்கள் சேர்ந்து நடித்துள்ள திரைப்படம் ‘செக்கச் சிவந்த வானம்’. இதனை மணிரத்னம் இயக்கி உள்ளார். ‘காற்று வெளியிடை’க்குப் பிறகு வெளியாகும் மணிரத்னம் படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தத் திரைப்படம் நாளை மறுநாள் திரைக்கு வர உள்ளது. 

இந்நிலையில் இப்படத்தின் ஒருநிமிட வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் விஜய் சேதுபதி ஒரு முதியவர் பின்னால் மோட்டார் பைக்கில் உட்காந்து வருகிறார். அவர்களை எதிர்பார்த்து ஒரு பாட்டி நிற்குறார். அப்போது அவர் ‘பெருசும் சிறுசும் குடிச்சுட்டு வந்திருக்கீங்களா?’ என்கிறார்.

அதற்கு பாட்டியை பார்த்து விஜய்சேதுபதி, “சுல்தானா.. மை சாச்சா இஸ் பிரிலியண்ட். எனக்கும் தீபிகா படுகோனேவுக்கும் மேரேஜ் ஃபிக்ஸ் பண்ணியிருக்காரு. சீக்ரெட்ஸ் மேரேஜ்’ என்கிறார். அதற்கு பாட்டி ‘போங்கடா நீங்களும் உங்க லக்யாணமும்’ என்கிறார். இந்தக் காட்சிதான் தற்போது வெளியாகியுள்ளது. 

மேலும் இந்தப் படத்தில் ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஃபகத் ஃபாஅசில், அரவிந்த் சாமி எனப் பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புராடக்ஷன் இணைந்து தயாரித்துள்ளது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close