[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.73.29 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை; ஒவ்வொரு வெளிநாட்டு பயணம் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கிறேன் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
  • BREAKING-NEWS ரூ.1,258 கோடியில் மதுரையில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது
  • BREAKING-NEWS 2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி - மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அறிவிப்பு
  • BREAKING-NEWS மோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி

சர்ச்சைகளை தகர்த்து சிறந்த நடிகராக விஜய் தேர்வானது எப்படி..?

how-vijay-selected-as-best-actor

மெர்சல் படத்தில் நடித்ததற்காக 2018-ஆம் ஆண்டின் சர்வதேச சிறந்த நடிகராக விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்து வெளியான ‘மெர்சல்’ திரைப்படம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. படத்தில் இடம் பெற்றிருந்த ஜிஎஸ்டி சம்பந்தமான வசனங்களை கண்டித்து பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். குறிப்பிட்ட வசனத்தை நீக்க வலியுறுத்தி குரல் எழுப்பி வந்தனர். இதனை கண்டித்தும் நடிகர் விஜய்க்கு ஆதரவாகவும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி உட்பட பல அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

மேலும் விஜய்யின் இயற்பெயரான ஜோசப் விஜய் ஒரு சர்ச்சையாக உருவெடுத்தது. பல கட்டங்களில் எதிர்ப்புக்கள் இருந்தாலும் திரைப்படம் மாபெரும் வெற்றியை அடைந்தது. `ஆளப்போறான் தமிழன்' பாடல் பட்டிதொட்டி எங்கும் ஒலித்து பல்வேறு சாதனைகளையும் படைத்தது.  அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அதிக வசூலை ஈட்டிய திரைப்படம் என்ற சாதனையை பெற்றது. 2017 ஆம் ஆண்டின் பாக்ஸ் ஆபிஸ் பட்டியலில் இடம்பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாகவும் ஓடியது.

இதனிடையே, மெர்சல் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சர்வதேச அளவில் வழங்கப்படும் ஐஏஆர்ஏ விருதுக்கு விஜய்யின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. போட்டியாளர்களில் வெற்றி பெறுபவர்களை தேர்ந்தெடுப்பதற்கு ஆன்லைன் வாக்குப்பதிவும் நடைபெற்றது. இந்தத் தகவலை அறிந்த விஜய் ரசிகர்கள் பலர், ஆன்லைனில் விறுவிறுப்பான வாக்குப்பதிவில் ஈடுபட்டனர். இந்த விருதுக்கு, விஜய்யுடன் பல்வேறு நாடுகளை சேர்ந்த தயீம் ஹாசன், ஜோஷ்வா ஜாக்சன், கென்னத் ஒகோலி உள்ளிட்ட ஆறு பேர் பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், தற்போது விஜய் சிறந்த நடிகராக தேர்வாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அத்தோடு #BestInternationalActorVIJAY என்கிற ஹேஷ்டேக்கும் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

சர்வதேச கலைஞர்களை கௌரவிக்கும் விதமாக கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் ஐஏஆர்ஏ என்ற அமைப்பு இந்த விருதுகளை வழங்கி வருகிறது. மொத்தம் 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close