[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க இன்று மாலை ஒப்பந்தம் கையெழுத்தாகிறது டெல்லி தனியார் ஓட்டலில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அனுமதி வழங்குகிறார் அமைச்சர் தர்மேந்திர பிரதான்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு
  • BREAKING-NEWS அறிமுகமானது முறைப்படுத்தப்பட்ட வாடகைத் தாய் மசோதா
  • BREAKING-NEWS தனியார் மருத்துவமனைக்கு ராஜகோபாலை மாற்ற நீதிமன்றம் அனுமதி

லக்னோவில் விஜய்சேதுபதியுடன் சண்டை போடும் ரஜினி

rajinikanth-resumes-shoot-for-karthik-subbaraj-s-petta-in-lucknow

ரஜினியின் ‘பேட்ட’ படத்தின் படப்பிடிப்பு தற்போது லக்னோவில் நடைபெற்று வருகிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ‘பேட்ட’ படத்தின் படப்பிடிப்பு லக்னோவில் நடைபெற்று வருகிறது. அந்தப் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் பங்கேற்று நடித்து வருகிறார். அதனையடுத்து காசி உள்ளிட்ட வட இந்தியாவில் மேலும் சில இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. மொத்தம் 45 நாட்கள் இந்தப் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

விஜய்சேதுபதிக்கும் ரஜினிக்குமான சண்டைக்காட்சிகள் படமாக்கப்படு வருவதாக தெரிய வந்துள்ளது. காசியில் எடுக்கவுள்ள காட்சிகளில் த்ரிஷா பங்கேற்ற இருக்கிறார். இங்கே இருவருக்குமான காட்சிகளை மட்டும் எடுக்க திட்டமிடுள்ளார் இயக்குநர். அநேகமாக இந்தக் காட்சிகள் படத்தின் ப்ளாஷ் பேக்கில் பயன்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 

இதற்கிடையில்  5 நாட்கள் மட்டும் சென்னை வரும் ரஜினி மன்ற பணிகளில் ஈடுபட உள்ளார். இந்நிலையில் ‘பேட்ட’ படத்தை வரும் ஆண்டு பொங்கல் பண்டிகை அன்று திரையிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close