[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 50பேர் உயிரிழந்ததாக தகவல்
  • BREAKING-NEWS கேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு
  • BREAKING-NEWS டெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...
  • BREAKING-NEWS வழக்கறிஞர்களுடன் ஆலோசித்த பின் எப்போது மனு தாக்கல் செய்வது என்பது குறித்து முடிவு - தேவசம் போர்டு
  • BREAKING-NEWS சபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக தேவசம்போர்டு ஆலோசனை
  • BREAKING-NEWS சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை
  • BREAKING-NEWS சபரிமலை 18ஆம் படியின் கீழ் அர்ச்சகர்கள் தர்ணா

பொங்கல் ட்ரீட் ஆக வெளியாகும் ரஜினியின் ‘பேட்ட’

rajinikanth-s-petta-to-hit-the-screens-for-pongal

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘பேட்ட’ திரைப்படம் வெளியாகும் நாள் தெரிய வந்துள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ‘பேட்ட’. இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில்தான் வெளியானது. இந்த போஸ்டரை பற்றி இருவேறுவிதமான கருத்துக்களை சமூக ஊடகங்களில் அவரது ரசிகர்கள் தெரிவித்திருந்தனர். அதனையடுத்து ‘ரஜினியின் படத்தை இயக்குவது எனது சிறுவயது கனவு’என்று இயக்குநர் கூறியிருந்தார். ரஜினியின் படங்களிலேயே மிக வேகமாக இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுக்க முடிவடைய உள்ளது. அதனையொட்டி படக்குழு இப்படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. 

இந்தப்படத்தில் பாலிவுட் ஆக்டர் நவாஸுதீன் சித்திக், த்ரிஷா, விஜய்சேதுபதி ஆகியோர் முதன்முறையாக ரஜினியுடன் இணைந்திருக்கிறார்கள். மேலும் பாபி சிம்ஹா, முனிஷ்காந்த், மேகா ஆகாஷ், சானத் ரெட்டி போன்றோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close