[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

சிவகார்த்திகேயன் படத்துக்கு இதுதான் டைட்டிலா?

sivakarthikeyan-film-titled-jithu-jilladi

சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்துக்கு விஜய் பட பாடல் வரியை டைட்டிலாக வைத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

‘சிவா மனசுல சக்தி’, ’பாஸ் என்கிற பாஸ்கரன்’ , ’ஒரு கல் ஒரு கண்ணாடி’, கடவுள் இருக்கான் குமாரு’ உட்பட சில படங்களை இயக்கியவர் ராஜேஷ்.எம். இவர் அடுத்து இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார். நயன்தாரா ஹீரோயின். சதீஷ், யோகிபாபு, ராதிகா சரத்குமார் உட்பட பலர் நடிக்கின்றனர். ’ஹிப் ஹாப்’ தமிழா இசை அமைக்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. 

(ராஜேஷ்.எம்)

இதன் படப்பிடிப்பு இப்போது நடந்துவருகிறது. இந்நிலையில் இந்த படத்துக்கு ’ஜித்து ஜில்லாடி’ என்று டைட்டில் வைத்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இது விஜய்யின் ’தெறி’ பட பாடல் வரி ஆகும். ஆனால், டைட்டில் முடிவாகவில்லை என்று இயக்குனர் ராஜேஷ்.எம் கூறியுள்ளார்.

’படத்தின் டைட்டில் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவோம்’ என்று தெரிவித்துள்ளார். இந்த டைட்டிலேயே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்களோ என்னவோ?

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close