[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆன விக்ரம் பிரபு

encounter-specialist-vikram-prabhu-says-thuppakki-munai-director

‘துப்பாக்கி முனை’ படத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் காதாப்பாத்திரத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார். 

"60வயது மாநிறம்" படத்திற்கு பிறகு விக்ரம்பிரபு நடித்து முடித்திருக்கும் படம் "துப்பாக்கி முனை". இப்படத்தின் கதையும், கதைக்களமும் வித்யாசமாக இருந்ததால் இந்தப் படத்தில் நடித்ததாக விக்ரம்பிரபு கூறியுள்ளார்.

"சட்டத்தை இந்தச் சமூகம் கேடயமாக பயன்படுத்துகிறது. அனால் நான் வாளாக பயன்படுத்துகிறேன். வறுமைதான் முன்பு குற்றவாளிகளை உருவாக்கியது. இன்று அதிகாரம் குற்றவாளிகளை உருவாக்குகிறது. தேசத் தந்தை காந்தியை சுட்ட துப்பாக்கி தவிர, சமுதாயத்திற்காக சந்தன மரமாய் தேய்ந்து தேய்ந்து மனம் வீசி கொண்டிருக்கும் ஒவ்வொரு போலீசரிடமுள்ள எல்லா துப்பாக்கிகளும் மதிப்பு மிக்கவை என்பது என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் பிர்லா போஸின் கருத்து. தன் கருத்தில் உறுதியாக இருக்கும் போஸின் வாழ்க்கையில் அவர் இழந்தது என்ன? பெற்றது என்ன? என்பதே ‘துப்பாக்கி முனை’யின் கதை சுருக்கம்” என்கிறார் இயக்குனர் தினேஷ் செல்வராஜ்.  

இப்படத்தில் ஹன்சிகா மோத்வானி முதன்முறையாக விக்ரம்பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். செண்டிமெண்ட் மற்றும் ஆக்க்ஷனுக்கு முக்கியதுவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு முக்கியமான சமூகப் பிரச்சனை குறித்து பேசப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

ராமேஸ்வரம், தனுஷ்கோடி மற்றும் அதனை சுற்றியுள்ள தீவுகளிலும் மும்பை, டெல்லி, மதுரை,சென்னை ஆகிய இடங்களில் மொத்தம் 40 நாட்கள் வரை படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளது படக்குழு.

வேல.ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், 'ஆடுகளம்' நரேன், 'மிர்ச்சி' ஷா, மாரிமுத்து, தீனா, பரத்ரெட்டி, கல்யாணி நட்ராஜ், வின்சென்ட் அசோகன் மற்றும் பலர் நடித்திருக்கும் இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவை ராசமாதி மற்றும் எல்.வி.முத்து கணேஷ் செய்துள்ளனர். இவர்களின் ஒளிப்பதிவைக் கண்டு மணிரத்னம் சமீபத்தில் பாராட்டி இருந்தார்.  படத்தின் பின்னணி இசை சேர்ப்பு வேலைகள் கிரீஸ் நாட்டில் உள்ள மெக்கடோனியாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் திரைப்படத்தினை வி.கிரேஷன்ஸ்  சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close