[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்
  • BREAKING-NEWS காவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டு பற்றிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நெஞ்சுவலி காரணமாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

யுடியூப்பில் 50 லட்சத்தை தாண்டிய ‘சின்ன மச்சான்’ பாடல்: அம்ரீஷ் ஹேப்பி

chinna-machan-songs-success-meet

‘சின்ன மச்சான்’ பாடல் யுடியூப்பில் 50 லட்சம் பார்வையாளர்களை தாண்டியதையொட்டி படக்குழுவினர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.            

யுடியூப் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்துள்ளது ‘சார்லி சாப்ளின்2’  படத்தின் ‘சின்ன மச்சான்..செவத்த மச்சான்’ பாடல். இதுவரை 53 லட்சம் பேர் இதனை பார்த்திருக்கிறார்கள். இந்தப் பாடலுக்கு அம்ரீஷ் இசையமைத்துள்ளார். செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி இணைந்து பாடிய இந்தப் பாடல் இன்று ‘மியூசிக்கலி’ யில் தொடங்கி பட்டித்தொட்டி வரை பாப்புலராகி இருக்கிறது.  

இந்த வெற்றியை பகிர்ந்து கொள்வதற்காக ‘சார்லி சாப்ளின்2’ படக்குழு செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய தயாரிப்பாளர் அம்மா கிரியேசன்ஸ் டி.சிவா, “ இந்தப் பாடல் தனியார் தொலைக்காட்சியில் செந்தில் கணேஷூம் ராஜலட்சுமியும் சேர்ந்து பாடியபோதே இது சூப்பர் ஹிட் ஆகும் என்று நினைத்தேன். உடனே அவர்களிடம் பேசி உரிமம் வாங்கி வைத்துவிட்டேன். அதற்குப் பிறகுதான் இந்தப் பாடலுக்கு விருது வழங்கப்பட்டது” என்றார். 

இயக்குனர் ஷக்திசிதம்பரம், “இசையமைப்பாளர் அம்ரீஷ் நல்ல இசை ஞானம் உள்ளவர்.  இந்த ஒரு பாடலே இன்று பட்டையை கிளப்பி இருக்கிறது. அடுத்து வரபோகின்ற பாடல்கள் இன்னும் பட்டையை கிளப்பும்” என்றார்.

சமூக வலைத்தளத்தில் தனது பாடல் வெற்றிபெற்றுள்ளதை பற்றி இசையமைப்பாளர் அம்ரீஷ், “ இந்தப் பாடலை ட்விட் செய்து பாப்புலராக்கிய தனுஷூக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். பிரபுதேவா விதவிதமான டியூனுக்கு எவ்வளவோ டான்ஸ் ஆடி இருக்கிறார். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். ‘சின்ன மச்சான்’ பாடலுக்கு அவர் ஆடியதால்தான் நான் வெற்றி பெற்றிருக்கிறேன்.‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் மூலம் சினிமாவில் எனக்கான ஒரு இடத்தை ராகவா லாரன்ஸ் ஏற்படுத்தி கொடுத்தார். இன்று தனது நடனத்தின் மூலம் ஒரு இடத்தை பிரபுதேவா எனக்கு ஏற்படுத்தி கொடுத்துள்ளார். 

மிகப் பெரிய இசையமைப்பாளர்கள் மத்தியில் வளர்ந்து வரும் எனக்கும் ஒரு இருக்கை கிடைத்திருக்கிறது என்பது சந்தோஷமே. அடுத்து ‘சார்லி சாப்ளின்2’ படத்தில் இன்னும் 4 பாடல்கள் வெளிவர இருக்கின்றன. அதுவும் மக்களின் ஆதரவுடன் வெற்றி பெறும் என்று நம்பறேன்” என்றார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close