[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS இன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்!
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்
  • BREAKING-NEWS சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
  • BREAKING-NEWS நாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது
  • BREAKING-NEWS வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்

விஜய்யின் ‘தளபதி 63’ அட்லீ கன்ஃபார்ம்?

atlee-opens-up-about-his-next-with-vijay

விஜய் நடிக்க உள்ள அடுத்த படத்தை அட்லீ இயக்குவது ஏறக்குறைய உறுதி எனத் தெரிய வந்துள்ளது.

நடிகர் விஜய்யை வைத்து ‘தெறி’, ‘மெர்சல்’ என இரண்டு படங்களை தந்தவர் அட்லீ. அதனை தொடர்ந்து அடுத்த படத்தையும், அதாவது ‘தளபதி62’ படத்தையும் இவரே இயக்குவார் எனப் பேச்சு அடிப்பட்டது. ஆனால் இறுதி தருணத்தில் அந்த வாய்ப்பு ஏ.ஆர்.முருகதாஸூக்கு சென்றது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முழுவதுமாக முடியும் தருணத்தை எட்டி இருக்கின்றன. வரும் தீபாவளிக்கு படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை யார் இயக்க இருக்கிறார்கள் என பேட்டி தொடங்கிவிட்டது. அந்தப் போட்டியில் ‘சதுரங்கவேட்டை’ வினோத், ஏ.எல்.விஜய் இருப்பதாக செய்திகள் அடிப்பட்டு வந்தன. ஆனால் அந்த வாய்ப்பு மீண்டும் அட்லீக்கு கிடைக்க உள்ளதாக செய்திகள் வெளிவர தொடங்கியுள்ளன.

இதனை அட்லீ தனது நெருங்கிய வட்டத்தினரிடம் உறுதி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆகவே ‘தளபதி63’ படத்தை அட்லீ இயக்க இருக்கிறார் என்கிறனர் விஜய்யின் நெருங்கிய வட்டத்தினர். ஆனால் இந்தத் தகவல்கள் யாவையும் உறுதியான செய்திகள் அல்ல. ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ள படத்தைதான் விஜய் அடுத்து நடிக்க இருக்கிறார். அந்நிறுவனம் சார்பில் அட்லீயிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : AtleeVijay‘தளபதி63’அட்லீ
Advertisement:
Advertisement:
[X] Close