[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS புதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகள் உயர்ந்து ரூ.72.94க்கு விற்பனை செய்யப்படுகிறது
  • BREAKING-NEWS மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்

கன்னியாஸ்திரிகள் பற்றிய கேள்வி: மன்னிப்புக் கேட்டார் மோகன்லால்!

mohanlal-apologises-for-his-comment

கேரளாவில் கன்னியாஸ்திரிகள் போராட்டம் பற்றி கேள்வி கேட்ட செய்தியாளரிடம் கோபமாக நடந்துகொண்ட நடிகர் மோகன் லால், அதற்காக மன்னிப்புக் கேட்டுள்ளார்.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில், பிராங்கோ முல்லக்கால் என்பவர் பிஷப்பாக இருக்கி றார். இவர், அங்கு பணிபுரியும் கன்னியாஸ்திரியை, 2014 முதல் 2016 வரை 13 முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை பிஷப் மறுத்தார். இந்நிலையில், பிராங்கோ மீது தேவாலய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வில்லை என்றும் புகார் கொடுத்து இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகியும் போலீசார் அவரை கைது செய்யாததை கண்டித்தும் ஐந்து கன்னியாஸ் திரிகள் கோட்டயத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

Read Also -> பிரபல நடிகர் கேப்டன் ராஜூ திடீர் மரணம்


இந்நிலையில், தனது பெற்றோர் பெயரில் நடத்தி வரும் விஸ்வசாந்தி அறக்கட்டளை சார்பாக, வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் நடிகர் மோகன் லால். அப்போது அவரிடம் கன்னியாஸ்திரிகளின் போராட்டம் பற்றி செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்டார். இதனால் கோபமடைந்த மோகன்லால், ‘இங்கு நல்ல விஷயம் நடந்துகொண்டிருக்கும்போது இப்படி தேவையில்லாத கேள்விகேட்க உங்களுக்கு வெட்கமாக இல்லையா? இங்கு நடப்பதற்கும் கன்னியாஸ்திரி பிரச்னைக்கும் என்ன சம்பந்தம்? இங்கு பெரும் பேரழிவு (மழை வெள்ளம்) நடந்திருக்கிறது, நீங்கள் எதையோ கேட்கிறீர்கள்?’ என்று கோபமாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.

மோகன்லால் இப்படி கோபமாக பேசியது சர்ச்சையானது. சமூக வலைத்தளங்களில் இந்த விவகாரம் விவாதப்பொருளாக மாறியது. இந்நிலை யில் தனது இந்த செயலுக்கு மன்னிப்புக் கோரியுள்ளார் மோகன்லால். 

இதுபற்றி தனது பேஸ்புக் பக்கத்தில். ‘கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலதிட்ட உதவிகளை என்னுடைய அறக்கட்டளை சார்பில் வழங்கினேன். அப்போது, ஒரு செய்தியாளர் கன்னியாஸ்திரி விவகாரம் பற்றி கேட்டார். நான் நடத்திய நிகழ்ச்சிக்கும் அவர் கேட்ட கேள்விக்கும் தொடர்பில்லை. நேரத்துக்குப் பொருந்தாத கேள்வியை அந்த செய்தியாளர் கேட்டார்.

Read Also -> என்ன சொல்ல வருகிறது ’மெரினா புரட்சி’?

மாநிலத்தைப் பொறுத்தவரை கன்னியாஸ்திரி விவகாரம், கேள்வி அவசியமானது என்றாலும் இந்த நிகழ்ச்சிக்குத் தேவையில்லாதது. அந்தக் கேள்விக்கு பதில் அளிக்கும் மனநிலையிலும் நான் இல்லை. அதனால்தான் அவ்வாறு கடுமையாக நடந்துகொண்டேன். இந்த விஷயத்தைப் பெரிதுபடுத்தாமல், என்னை சகோதரராக கருதி மன்னிக்க வேண்டும் என்று அந்த செய்தியாளரிடம் கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close