[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

லிஃப்டில் அத்துமீறிய நடிகர்: ராதிகா ஆப்தே பரபரப்பு புகார்

radhika-apte-reveals-her-metoo-moment

தன்னிடம் நடிகர் ஒருவர் ஆபாசமாக நடந்துகொண்டார் என்று பரபரப்பு புகார் ஒன்றை நடிகை ராதிகா ஆப்தே மீண்டும் தெரிவித்துள்ளார்.

தமிழில், வெற்றிச்செல்வன், தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, கபாலி ஆகிய படங்களில் நடித்திருப்பவர் இந்தி நடிகை, ராதிகா ஆப்தே. சினி மா துறையில் பாலியல் தொல்லைகள், ஹீரோ ஆதிக்கம் உள்ளிட்ட விஷயங்கள் பற்றி வெளிப்படையாக பேசும் ராதிகா ஆப்தே, தமிழ் சினிமா ஹீரோ மீது பரபரப்பு புகார் ஒன்றை கூறியிருந்தார். ‘தமிழில் ஒரு படத்தில்  நடித்தேன். அந்தப் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பிலேயே ஹீரோ என்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். அவர் தமிழில் பெரிய நடிகர். இதற்கு முன் அவரை நேரில் பார்த்தது கூட இல்லை. என் பாதங்களை அவர் வருடியதும் கோபத்தில் ஓங்கி அறைந்துவிட்டேன்’ என்று தெரிவித்திருந்தார். இந்த விஷயம் பரபரப்பானது. இந்நிலையில் இன்னொரு பரபரப்பு புகார் ஒன்றை இப்போது தெரிவித்துள்ளார். 

’சமீபத்தில் எனக்கு நடந்த நிகழ்ச்சி ஒன்றை பகிர்ந்துகொள்கிறேன். படப்பிடிப்பில் எனக்கு முதுகுபக்கத்தில் காயம் ஏற்பட்டிருந்தது. வலியால் தவித்தேன். ஷூட்டிங் முடிந்த பின் அறைக்கு திரும்பிக் கொண்டிருந்தேன். ஹோட்டல் லிஃப்டில் ஏறினேன். அதே லிஃப்டில் அந்தப் படத்தில் என்னுடன் நடித்த நடிகரும் வந்தார். நாங்கள் இருவர் மட்டுமே இருந்தோம். ஒன்றாக நடித்தாலும் அவருடன் நான் பேசிக்கொண்டதில்லை. அவர் திடீரென்று என்னிடம் அத்துமீறி பேசினார். ‘நள்ளிரவில் ஏதாவது உதவி தேவை என்றால் தெரியப்படுத்துங்கள். நான் வந்து உங்கள் முதுகை தடவி விடுகிறேன்’ என்றார். இதனால் அதிர்ச்சி அடைந்தேன். இதன் மூலம் அந்த நடிகர் என்னை சங்கடமான நிலைக்கு தள்ளியது பற்றி உணரவே இல்லை. பின்னர் நான் தயாரிப்பாளரிடம் சொன்னேன். அவர்கள் அந்த நடிகரிடம் பேசினார்கள். பிறகு அவர் என்னிடம் மன்னிப்புக் கேட்டார்’ என்று தெரிவித்துள்ளார்.

அதோடு, மீ டூ மூவ்மென்ட் என்ற ஹேஷ்டேக்கை இந்திய சினிமாதுறைக்கும் கொண்டு வரவேண்டும் என்றும் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் சினிமா துறையில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகிறார்கள். அவர்களும் தங்கள் புகார்களை தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். ’இங்கு அதிகார விளையாட்டு நடக்கிறது. யாரும் தங்கள் அதிகாரத்தை விட்டுக்கொடுக்க விரும்பவில்லை’ என்றும் அவர் தெரிவித்துள்ளார். 


ஆஸ்கர் விருது வென்ற ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக புகார் கூறப்பட்டது. பிரபல ஹாலிவுட் நடிகைகளான ஏஞ்சலினா ஜோலி, கைனெத் பால்ட்ரோ, காரா டெலவிங்னி உள்பட பல நடிகைகள் பலர், வெயின்ஸ்டீன் மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்களை தெரிவித்தனர். சுமார் 80 நடிகைகள் அவர் மீது பாலியல் புகார் கூறியிருந்ததை அடுத்து ஹாலிவுட் நடிகைகள் மீ டூ (#MeToo) என்ற ஹேஷ்டேக்கில் பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்ட விஷயங்களை பகிர்ந்துவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close