[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் ஆணையம் எந்த சின்னத்தை ஒதுக்கினாலும் அமமுக மிகப்பெரிய வெற்றி பெறும் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் தொகுதியில் பாஜக சார்பில் மேனகா காந்தி போட்டியிடுகிறார்
  • BREAKING-NEWS குக்கர் சின்னம் கிடைக்காத நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுபடி பொதுச்சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் டிடிவி தினகரன் மனு
  • BREAKING-NEWS காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும்; கார்த்தி சிதம்பரத்திற்கு சீட் கொடுத்ததில் தவறில்லை - காங்கிரஸ் தேனி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன்
  • BREAKING-NEWS 2ம் கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறும் தமிழகம். புதுச்சேரி உள்ளிட்ட 97 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பு மனுத்தாக்கல் நிறைவு
  • BREAKING-NEWS டிடிவி தரப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவை மற்ற வழக்குகளுக்கு முன்மாதிரியாக கருதக்கூடாது என்ற ஆணையத்தின் கோரிக்கை நிராகரிப்பு
  • BREAKING-NEWS டிடிவி தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

யோகிபாபுவின் ரகளையான ‘கூர்கா’ ஃபர்ஸ்ட் லுக்

yogi-babu-gurkha-first-look-poster-released

யோகிபாபு முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘கூர்கா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் தற்போதைய காமெடி நடிகர்களில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளவர் யோகிபாபு. இவரை வைத்து சாம் ஆண்டன் புதுப்படம் ஒன்றை இயக்கியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. படத்திற்கு ‘கூர்கா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை வெளியிட்டுள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் யோகிபாபு இது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், யோகிக்கு தனது வாழ்த்துகளை தெரிவிப்பதாக சிவகார்த்திகேயன் ட்விட்டரில் கூறியுள்ளார்.. ‘ஃபேர் மங்கிஸ் ஸ்டூடியோ’ இப்படத்தை தயாரிக்கிறது.

சமீபத்தில் யோகிபாபு ஹீரோவாக நடிப்பதாக செய்திகள் பரவின. இதனையடுத்து அவரே அதற்கு விளக்கம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “ ‘எனக்கு இன்னொரு பெயர் இருக்கு’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் சாம் ஆண்டன் என்னிடம் ஒரு கதையை சொன்னார். ஒரு நாய் மற்றும் வெளிநாட்டுக்காரரை மையமாக வைத்துதான் இந்தக் கதை. அவர்கள் வழிமாறி வந்து என்னிடம் மாட்டிக் கொள்கின்றனர். நார்மலா எப்போதும் போல காமெடி கேரக்டரில்தான் இப்படத்திலும் நடிக்கிறேன். முக்கிய கதாபாத்திரம் அந்த வெளிநாட்டு பெண்மணி மற்றும் நாய்தான். நான் ஒரு ‘கூர்கா’ கேரக்டரில் நடிக்கிறேன். அவ்வளவுதான். ஹீரோ முகமும் அதற்கான தகுதியும் எனக்கு கிடையாது” என தெரிவித்திருந்தார். இந்நிலையில் யோகிபாபுவை மையப்படுத்தியே ‘கூர்கா’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close