[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது
  • BREAKING-NEWS காணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்
  • BREAKING-NEWS சேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்

'ஹீரோயின்களுக்கு சம்பளம் கொடுக்க மட்டும் இனிக்குதா ?' தயாரிப்பாளர்களை கலாய்த்த மீம்

ace-cinematographer-santosh-sivan-trolls-film-producers-with-a-meme

இந்திய சினிமாவின் மிக முக்கியமான ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் சந்தோஷ் சிவன். தமிழில் மணிரத்னத்தின் ரோஜா, தளபதி, இருவர், உயிரே துப்பாக்கி மற்றும் கடந்தாண்டு வெளியான ஸ்பைடர் உள்ளிட்ட படங்களில் பணியாற்றியவர். மேலும் இந்தியில் அசோகா, டெரரிஸ்ட் உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார். இம்மாதம் வெளியாகவுள்ள மணிரத்னத்தின் 'செக்கச் சிவந்த வானம்' படத்துக்கும் சந்தோஷ் சிவன்தான் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தமிழில் மட்டுமல்ல இந்தியிலும் சந்தோஷ் சிவனை தங்கள் படங்களில் ஒளிப்பதிவு செய்ய வைக்க கடும் போட்டி நிலவும். அப்படிப்பட்ட ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன், தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குறிய வகையில் ஒரு மீம் ஒன்றை போஸ்ட் செய்துள்ளார். அந்த மீம் போஸ்ட்டில் தயாரிப்பாளர்கள் ஹீரோயின்களுக்கு சம்பளம் கொடுக்கும்போது வாயை பிளந்துக்கொண்டு சந்தோஷமாக கொடுப்பது போன்றும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு சம்பளம் கொடுக்கும்போது கடுகடுவென கொடுப்பது போன்றும் போட்டுள்ளார்.

இது திரையுலகில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சந்தோஷ் சிவன் எந்த தயாரிப்பாளரை கூறுகிறார் ? குறிப்பிட்ட ஒருவரை பற்றி இப்படி பதிவிட்டுள்ளாரா அல்லது ஒட்டுமொத்த தயாரிப்பாளர்களையும் இப்படி கூறியுள்ளாரா என திரையுலகில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சந்தோஷ் சிவனின் இந்த மீம்க்கு செக்கச் சிவந்த வானம் படத்தின் நாயகி அதிதி ராவ் ஹைதாரி, சிரிப்பு ஸ்மைலிகளை பதிலாக கொடுத்துள்ளார்.

சந்தோஷ் சிவனின் இந்தச் சர்ச்சைக்குறிய பதிவுக்கு பலரும், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மணிரத்னம்தான் உங்களுக்கு கடுப்புடன் சம்பளம் கொடுத்தாரா என்றும் கேட்டுள்ளனர். மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகவுள்ள 'செக்க சிவந்த வானம்' படத்தில் சிம்பு, அரவிந்த் சாமி, அருண் விஜய், விஜய் சேதுபதி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பல்வேறு கதாப்பாத்திரங்களில் ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் ஹைதாரி, டயானா ஹரப்பா ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தின் இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் அண்மையில் படத்தின் இரண்டு பாடல்களை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close