[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தின் 3 இடங்கள் உட்பட நாட்டின் 32 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஒப்பந்தம்
  • BREAKING-NEWS கொடைக்கானலில் ரூ.20 கோடியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் சோதனை முறையில் பொது இயக்கப்பயண அட்டை அறிமுகப்படுத்தப்படும் - போக்குவரத்துத்துறையில் புதிய அறிவிப்புகளை பேரவையில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வெளியிட்டார்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு

மீண்டும் சிட்டி ! வெளியானது 2.0 டீஸர்

the-most-anticipated-2-0-film-teaser-released-today

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ படத்தின் டீசர் இன்று காலை 9 மணிக்கு வெளியானது. 2டி டீஸர் யூடியூப் இணையதளத்திலும், 3டி டீஸர் தியேட்டர்களிலும் இன்று வெளியானது. ஏற்கெனவே வெளியாகி இருந்தது. ஷங்கர் இயக்கத்தில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தயாராகி வரும் திரைப்படம் ‘2.0’. இதில் ரஜினி, அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடித்துள்ளார். பல நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் இதனை  லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் போஸ்ட் புரொடெக்‌ஷன் வேலைகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன.

கடந்த வருடம் அக்டோபர் மாதம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து பல கட்டங்களில் படத்தின் புரமோஷன் செய்திகள் வெளியாகின. படத்தின் விஎஃப்எக்ஸ் வேலைகள் தாமதமாவதால் படத்தின் வெளியீடு தள்ளிப்போவதாக செய்தி வெளியானது. இந்நிலையில் அண்மையில் இயக்குநர் ஷங்கர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ட்வீட் செய்துள்ளார் "அதில் இந்த பிரம்மாண்டத்தை கொண்டு வர கிட்டத்தட்ட 3 ஆயிரம் தொழில்நுட்ப கலைஞர்கள் உழைத்திருக்கிறார்கள்" என பதிவிட்டிருந்தார்.

மேலும் அவர் வெளியிட்ட புதிய போஸ்டரில் "முதல்முறையாக இந்தியாவில் விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்துக்காக 75 மில்லியன் டாலர் செலவிடப்பட்ட திரைப்படம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பில் 75 மில்லியன் என்பது கிட்டத்தட்ட 543 கோடி இதனால் அசந்துப்போனார்கள் ரசிகர்கள். இதன் காரணமாக டீஸர் வெளியான சில நிமிஷங்களில் ஒரு லட்சம் பார்வையாளர்கள் கண்டுள்ளனர்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close